நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 137 இந்திய ராணுவ பொதுப் பள்ளிகளில் காலியாக உள்ள 8000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பை இராணுவ பொதுநலக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : இந்திய இராணுவப் பள்ளி
மேலாண்மை : மத்திய அரசு வேலை
மொத்த காலிப் பணியிடங்கள் : 8000
பணி : PGT
கல்வித் தகுதி : சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் முதுகலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும்.
பணி : TGT
கல்வித் தகுதி : இளங்கலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும்.
பணி : PRT
கல்வித் தகுதி : இளங்கலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும், டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
- 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- பணி அனுபவம் உள்ளவர்கள் 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : அனைத்து பிரிவினரும் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.
கட்டணம் செலுத்தும் முறை : விண்ணப்பக் கட்டணத்தை வங்கி அட்டைகளைப் பயன்படுத்தியோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை : www.awesindia.com என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 22.09.2019
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி : 2019 அக்டோபர் 19 மற்றும் 20 தேதிகளில் நடைபெறும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://aps-csb.in/PdfDocuments/GeneralInstructionCan.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.