ராணுவத்தில் பணியாற்றிட ஆசையா? உங்களுக்கான முக்கிய அறிவிப்பு இதோ.!

By Saba

இந்திய ராணுவத்தில் பல்வேறு பணிகளுக்கான ஆள் சேர்ப்பு முகாம் ஈரோட்டில் வரும் ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 2 வரை நடைபெற உள்ளது.

ராணுவத்தில் பணியாற்றிட ஆசையா? உங்களுக்கான முக்கிய அறிவிப்பு இதோ.!

 

இந்தியா ராணுவம் நாடு முழுவதும் பல நகரங்களில் ஆள் சேர்ப்பு முகாம்களை நடத்தி தகுதியுடைய வீரர்களைத் தேர்வு செய்து வருகிறது. அதன்படி ஈரோடு மாவட்டம், வ.உ.சி. மைதானத்தில் வரும் ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 2 வரை ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதில், ஈரோட்டின் சுற்றுவட்டார மாவட்டங்களான கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், நீலகரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, மதுரை, தேனி, சேலம் ஆகிய மாவட்டங்களிலிருந்து சோல்ஜர் டெக்னிக்கல், சோல்ஜர் டெக்னிக்கல் அம்யூனிசன்/ ஏவியேசன், சோல்ஜர் நர்சிங் அசிஸ்ட்ன்ட், சோல்ஜர் ஜெனரல் டியூட்டி, சோல்ஜர் கிளர்க்ஃஸ்டோர் கீப்பர், சோல்ஜர் டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட பிரிவுகளில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்திய ராணுவத் துறையின் www.joinindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஜூலை 8, 2019 முதல் ஆகஸ்ட் 7, 2019 வரை இதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஆகஸ்ட் 8ஆம் தேதி தேர்வர்களுக்கான அட்மிட் கார்டு ஆன்லைனில் வெளியிடப்படும். முகாமுக்கு வரும்போது அட்மிட் கார்டு மற்றும் ஆவணங்களைப் பாதுகாப்பாக எடுத்துவர வேண்டும். பல்வேறு பிரிவுகள் இருந்தாலும் ஏதேனும் ஒரு பிரிவில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பதாரர்களுக்கு ஆவணப் பரிசோதனை நாள் மற்றும் நேரம், உடற்தகுதித் தேர்வு, உடல் அளவீடு செய்வதற்கான நாள் ஆகியவை குறித்து அட்மிட் கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும். மருத்துவப் பரிசோதனை முகாம் நடைபெறும் நாட்களில் ஆகஸ்ட் 23ஆம் தேதி நடக்கும்.

இதில் விண்ணப்பிக்க விரும்புவோர், மேலும் தகவல்களை அறிய https://cdn.tamilanjobs.com/wp-content/uploads/2019/06/ARO_COIMBATORE_RALLY_2019_TAMILANGUIDE_GMR_SuKu...pdf?_ga=2.177441253.1348978869.1562835276-717824330.1561097017 என்னும் லிங்கில் சென்று பார்க்கவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Army Recruitment Rally- Coimbatore From 22 Aug 2019 to 02 Sep 2019 at VOC Park Stadium, Erode
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X