மத்திய அரசின் அங்கமாகக் கருதி செயல்படும் பொது சுகாதார சேவை இயக்குநரகத்தில் (டிஜிஎச்எஸ்) பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதிவாய்ந்த இளைஞர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.
டிஜிஎச்எஸ் என்று அழைக்கப்படும் பொது சுகாதார சேவை இயக்குநரகம் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இந்த பொது சுகாதார சேவை இயக்குநரகத்தில் ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்கள் 3, பீல்டு ஒர்க்கர் பணியிடங்கள் 140, ஹெல்த் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் 70, லேப் டெக்னீசியன் பணியிடங்கள் 21, பிசியோதெரபிஸ்ட் பணியிடங்கள் 4, ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் 77, நர்சிங் ஆபீஸர் பணியிடங்கள் 16, வார்டு பாய் பணியிடங்கள் 21, ரேடியோதெரபி பணியிடங்கள் 5, டெக்னீசியன் பணியிடங்கள் 5, நுாலக உதவியாளர் பணியிடங்கள் 6, விலங்கு உதவியாளர் பணியிடங்கள் 3, பாரா மெடிக்கல் பணியிடங்கள் 5 உட்பட மொத்தம் 487 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்த வேலையிடங்களுக்கு தொடர்புடைய பிரிவில் பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ., சான்றிதழ் படிப்புகளை முடித்திருத்தல் அவசியமாகும்.
காலியாக உள்ள இந்த இடங்களுக்கு வகும் 30.11.2023-ம் தேதி அடிப்படையில் பிரிவை பொறுத்து 18 - 25 வயது, 18 - 27, 20 - 25 வயதுத்தகுதி மாறுபடும்.
ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இந்தத் தேர்வுக்கான தேர்வு மையங்கள், சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, லக்னோ, ராஞ்சி, சண்டிகர், குவாஹாட்டி, கொல்கத்தா நகரங்களில் அமைக்கப்படும்.
ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.
விண்ணப்பக் கட்டணமாக ரூ. 600 செலுத்த வேண்டும். மகளிர், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
விண்ணப்பங்களை 30.11.2023-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.
மேலும் கூடுதல், விவரங்களுக்கு hlldhhs.btexam.in என்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












