பாரஸ்ட்ரி இன்ஸ்டிடியூட்டில் பிஎச்.டி. படிப்புக்கான நுழைவுத் தேர்வை எழுத மாணவர்கள் வரவேற்கப்படுகின்றனர். விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு https://fri.icfre.gov.in/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் அமைந்துள்ளது பாரம்பர்யமிக்க பாரஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்.
பாரஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் என்று அழைக்கப்படும் வன ஆய்வு நிறுவனம் (இந்தியா) (Forest Research Institute) வனவியல் ஆய்வு மற்றும் கல்விக்கான இந்திய கவுன்சில் அமைப்பினைச் சேர்ந்த ஒரு மிகச்சிறந்த கல்வி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் இந்தியாவில் வனவியல் ஆய்வில் இத்துறையில் செயல்பட்டு வருகின்ற முதன்மையான பயிலகமாக உருவெடுத்துள்ளது.

இது உத்தராகண்ட் மாநிலத்தின் டேராடூனில் மிகவும் எழிலுற அமைந்துள்ளது. இது மிகவும் பழமையான கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். 1991-ஆம் ஆண்டில், இது பல்கலைக்கழக மானியக் குழுவால் (யுஜிசி) நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்டது.
இந்த பாரஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் தம் வளாகத்தில் இந்திய வன சேவைக்கு (ஐ.எஃப்.எஸ்) தேர்ந்தெடுக்கப்படும் அலுவலர்களுக்கு பயிற்சியளிக்கும் ஊழியர் கல்லூரியான இந்திரா காந்தி தேசிய வன அகாடமியை (ஐஜிஎன்எஃப்.ஏ) ஏற்று நடத்தி வருகிறது.
இந்நிறுவனம் 1878 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இம்பீரியல் வனப்பள்ளியாக டீட்ரிச் பிராண்டிஸ் என்பவரால் நிறுவப்பட்டது. 1906-ஆம் ஆண்டில், இது பிரிட்டிஷ் இம்பீரியல் வனவியல் சேவையின் கீழ் இம்பீரியல் வன ஆராய்ச்சி நிறுவனமாக மீண்டும் நிறுவப்பட்டது.
வன ஆராய்ச்சி நிறுவனமாக 1906-ல் டேராடூனில் நிறுவப்பட்ட இந்த வன ஆய்வு நிறுவனம் (எஃப்ஆர்ஐ) முதன்முதலில் மால் சாலையில் உள்ள சந்த்பாக்கில் ( தற்போது டூன் பள்ளி அமைந்துள்ள இடம்) செயலாற்றி வந்தது. தற்போதைய இடத்தில் மிகப் பெரிய வளாகம் 1923-ஆம் ஆண்டில் வாங்கப்பட்டது.
அதன் பின்னர் புதிய கட்டிடங்களின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. சி.ஜி. ப்ளோம்ஃபீல்ட் என்பவரால் கிரேக்க-ரோமன் கட்டிடக்கலைப் பாணியில் வடிவமைக்கப்பட்ட இதன் முதன்மைக் கட்டிடம் 1929-ஆம் ஆண்டில் அப்போதைய வைஸ்ராய் வில்லிங்டனின் முதலாம் மார்க்வெஸ் ஆன ஃப்ரீமேன் ஃப்ரீமேன்-தாமஸ் என்பவரால் திறந்து வைக்கப்பட்டது. இது தற்போது ஒரு தேசியப் பாரம்பரியத் தளமாகச் செயல்படுகிறது.
இந்நிலையில் இந்த பாரஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டில் நடத்தப்பட்டு வரும் பிஎச்.டி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 10-ம் தேதி ஆகும்.
இதற்கான நுழைவுத்தேர்வு ஜனவரி 7, 2024 ஆகும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு https://fri.icfre.gov.in/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












