'கோல் இந்தியா லிமிடெட்'இல் ஆயிரத்துக்கும் 764 காலிப்பணியிடங்களுக்கான தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுற்றுச்சூழல், நிதி, சட்டம், மெக்கானிக்கல் ஆகிய பிரிவுகளில் தனித்தனியாக எவ்வளவு காலிப் பணியிடங்கள் உள்ளன என்பதை, நிறுவனம் அறிவித்துள்ளது.
விண்ணப்பங்களை எவ்வாறு சமர்ப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பொது நிபந்தனைகளையும் விரிவாக வெளியிட்டுள்ளது.

CIL Various Post Recruitment 2023
நிர்வாகம் : கோல் இந்தியா லிமிடெட்(Coal India Limited)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Management Trainee
மொத்த காலிப் பணியிடங்கள் : 1764
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 02.09.23
கல்வித் தகுதி
அரசு அல்லது அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரி, பல்கலைக்கழகங்களில், பதவிக்கு ஏற்ற பாடப்பிரிவில், முதுகலை பட்டப்பிடிப்பை தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் வயது குறித்து விரிவான விவரங்களை கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்வு முறை
கணினி வழியாக நடத்தப்படும் தேர்வில் பெறும் மதிப்பெண், கல்வி தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் காலிப் பணியிடங்களுக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
ஊதியம்
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்களுக்கான மாத ஊதியம் குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.
விண்ணப்பிக்கும் முறை
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வம் இருக்கும் நபர்கள் கட்டுரையின் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை, 'மறக்காதீங்க' பூர்த்தி செய்து, செப்டம்பர் 2 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
திரும்பவும் சொல்லுறேன்... பயப்படாதீங்க ஆன்லைனில் தான் விண்ணப்பிக்க போறீங்க...


Click it and Unblock the Notifications












