பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு உதவி பெறும் கல்லுாரியான அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில், காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
நிர்வாகம்: அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி (Arulmigu Palaniandavar College of Arts and Culture)
மேலாண்மை: மாநில அரசு
விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்

பணி விபரம்
உதவி பேராசிரியர் (முழு நேரம்)
விண்ணப்பிக்க கடைசி தேதி - அக்டோபர் 10,2023
பணி விவரம்
எக்கனாமிக், இந்தியன் கல்சர், காமர்ஸ், Zoology பிரிவுக்கு, தலா ஒருவர் என, மொத்தம் நான்கு பேர் உதவி பேராசிரியர்களாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அதேபோல், பேக்லாக் பிரிவில் ஆங்கிலத்துக்கு 3 பேர், வரலாறு, இந்தியன் கல்சர், காமர்ஸ், இயற்பியல் துறைகளுக்கு, தலா ஒருவர் என மொத்தம் 7 பேர் உதவி பேராசியர்களாக தேர்வு செய்யபப்ட உள்ளனர்.
கல்வி தகுதி
உதவி பேராசிரியர் பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயம் செய்த படிப்பை முடித்திருக்க வேண்டும். அதன்படி, குறிப்பிட்ட துறையில் NET, SLET, SET படிப்பை முடித்தவர்களும், பி.எச்.டி., முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
முழு நேர உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, கட்டணம் ஏதும் கிடையாது.
பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் முறையில் தெரிவு செய்யப்படுவர். நேர்காணலில் பங்கேற்பவர்கள், அவர்கள் தங்களின் சொந்த செலவில் தான் பங்கேற்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வழங்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, அஞ்சல் முறையில் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தேர்வாகும் நபர்களுக்கான ஊதியம் எவ்வளவு வழங்கப்படும் என்பது பற்றிய விபரம் வெளியாகவில்லை. இருப்பினும், அரசு விதிகள்படி, நல்ல ஊதியம் பெற வாய்ப்பு உள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆப்லைன் முறையில், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பின் வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
உதவி பேராசிரியர் பணிக்கான விண்ணப்பத்தை தயார் செய்து, சாதி சான்றிதழ், அனுபவ சான்று என கோரப்பட்ட சான்றிதழ்களில், அட்டெஸ்ட் செய்து நகல்களை இணைத்து, கீழே கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
‛The Secretary,
Arulmigu Palaniandavar College of Arts and Culture,
Palani - 624 601,
Dindigul District.
விண்ணப்பித்தவர்களில் தகுதியான நபர்கள் தெரிவு செய்யப்பட்டு, நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்ச்சி பெறுபவர்கள் உதவி பேராசிரியர் பணியில் அமர்த்தப்படுவர்.
கூடுதல் விவரங்களை அறிய, கீழே சொடுக்கவும்...!


Click it and Unblock the Notifications












