DHS thanjavur Recruitment 2023
தஞ்சாவூர் மாவட்டத்தில், மாவட்ட நலச்சங்கம் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு, தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிர்வாகம் : தேசிய நலவாழ்வு குழுமம்
மேலாண்மை : மாநில அரசு

பணி விவரம்
Ø மருத்துவ அலுவலர் (Medical Officer)
Ø பல்நோக்கு சுகாதார பணியாளர் PHW / MultiPurpose Health Worker (Health Inspector - Grade II)
Ø பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள்
Ø பல்நோக்கு சுகாதார பணியாளர்கள்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 21.02.2023
பணியிடங்கள் எண்ணிக்கை: 39
நோட் இட் ப்ளீஸ்...!
விண்ணப்பங்கள் தொடங்கிய தேதி : 07-02-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 21-02-2023
ஊதியம்
Ø மருத்துவ அலுவலர் -ரூ.60,000
Ø பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் - ரூ.14,000
Ø பல்நோக்கு சுகாதார பணியாளர்கள்- ரூ.8,500
Ø பல்நோக்கு சுகாதார பணியாளர்கள்- ரூ.8,500
கல்வித்தகுதி
மருத்துவ அலுவலர் பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து, இளங்கலை மருத்துவ படிப்பு (MBBS) முடித்திருக்க வேண்டும். மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் பணிக்கு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உயிரியல், தாவரவியல்,விலங்கியல் ஆகிய படிப்புகளை மேல்நிலை படிப்பில் ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.
தமிழ் மொழியைப் பாடமாக கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பல் நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்தவர்கள் மற்றும் தமிழை மொழிப் பாடமாக கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பல் நோக்கு சுகாதார பணியாளர்கள் பணியிடத்திற்கு 8ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
நோட் இட் ப்ளீஸ்...!
தகுதியான நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் மாதிரியை பதிவிறக்கம் செய்து, அவற்றை பூர்த்தி செய்து, பணிக்கு தேவையான கோரப்பட்ட அனைத்து சான்றிதழ்களின் நகல்களில் சுய ஒப்பமிட்டு இணைத்து 21.02.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
மருத்துவ அலுவலர், சுகாதார உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு அரசு விதிகளுக்கு உட்பட்டது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து அஞ்சல் மூலம் அனுப்பவது அல்லது அலுவலகத்திற்கு சென்று நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
செயற் செயலாளர்,
மாவட்ட நலவாழ்வு சங்கம்,
துணை இயக்குநர் ,
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்அலுவலகம்
காந்திஜி ரோடு, எல்.ஐ.சி. அலுவலகம் அருகில்
தஞ்சாவூர் - 613 001
தொடர்புக்கு - 04362 -273503.
என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்களை அளிக்கலாம்.
Ø பணிகள் முற்றிலும் தற்காலிகமானது.
Ø எந்தவொரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
கடைசி தேதிக்கு பின் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.
மிஸ் பண்ணிடாதீங்க...! டவுன்லோடு ப்ளீஸ்...!
https://thanjavur.nic.in/notice_category/recruitment/
என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications












