TN Forest Data Entry Operator Recruitment 2023: தஞ்சாவூர் கைய்ஸ்....! நோ எக்ஸாம் தஞ்சையில் தான் பணி...!

'டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்' பணிக்கு, தேர்வின்றி நேர்காணல் அடிப்படையில், ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். இப்பணிகளுக்கு ஜூன்.26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

நிர்வாகம் : தமிழ்நாடு வனத்துறை (தஞ்சாவூர் வனக்கோட்டம்)

மேலாண்மை : மாநில அரசு

தஞ்சை வனக்கோட்டத்தில் பணி வாய்ப்பு..!

பணி விவரம்

Ø Data Entry Operator

Ø Technical Assistant

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 2

விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.06.2023

கல்வி தகுதி

Technical Assistant

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிஎஸ்சி வனவியல்/வேளாண்மை அல்லது எம்எஸ்சி வனவிலங்கு உயிரியல், லைப் சயின்ஸ், தாவரவியல், விலங்கியல், நேச்சுரல் சயின்ஸ் அல்லது அதற்கு இணையான 2 ஆண்டு அனுபவம் கொண்ட கள ஆராய்ச்சி செய்த அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

இல்லையெனில் எம்சிஏ அல்லது அதற்கு சமமான எம்ஐஎஸ்/ஜிஐஎஸ் 2 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதேபோல், தமிழ்நாடு வனத்துறையின் பணியாளர்கள் தர ஊதியம் ரூ.4,800 மற்றும் அதற்கு மேலான அனுபவத்துடன் ஒய்வு பெற்றவர்களும் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Data Entry Operator

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். இல்லையெனில் டிப்ளமோ கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து இருக்க வேண்டும் அல்லது பட்டம்/டிப்ளமோ படிப்புடன் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் கம்ப்யூட்டர் பயன்பாடுகளில் சான்றிதழுடன் முடித்து 2 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும் அல்லது தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் பிரிவில் சான்று பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

ஊதியம்

தகுதி, திறமையின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்பட உள்ளது.

நோட் இட் ப்ளீஸ்....!

Ø விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 26.06.2023

தேர்வு முறை

காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல் முறையில் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இப்பணிகளுக்கு எழுத்து தேர்வு இல்லை என்பதை மறக்காதீங்க... நேர்காணலில் பங்கேற்று ஈஸியா பணி நியமன ஆணையை வாங்குங்க தஞ்சை யூத்ஸ்...!

டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு ஒருவரும், டேட்டா என்டரி ஆபரேட்டர் பணிக்கும் ஒருவர் என, மொத்தம் 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்கள் தற்காலிக பணியாகும்.

விண்ணப்பக் கட்டணம்

இப்பதவிக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.

மறக்காதீங்க...!

Ø விண்ணப்பங்கள் கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ முகவரிக்கு அஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.

Ø தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜூன் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பங்களை ‛‛மாவட்ட வனஅலுவலர், மாவட்ட வன அலுவலகம், பிள்ளையார்பட்டி, தஞ்சாவூர் - 613 403, தொலைபேசி எண் 04362 - 264669, Email ID: [email protected] என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

பொது விதிமுறைகள், நிபந்தனைகள் குறித்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்பட்டு உள்ளன.

க்ளிக் ப்ளீஸ்....! ஆல் தி பெஸ்ட்...!

https://www.forests.tn.gov.in/

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN Forest Recruitment 2023:It has been informed that the persons who have completed their graduation can apply for the vacant posts in Thanjavur Forest Division in Tamil Nadu Forest Department by June 26.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+