TNPSC மீன் துறை ஆய்வாளர் பணி 2022:விலங்கியல் படிச்சிருக்கீங்க? ரூ.1.19 லட்சத்தில் வேலை...!

TNPSC Notification for Inspector of Fisheries

தமிழ்நாடு அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் காலியாக உள்ள மீன்துறை ஆய்வாளர் பதவிக்கான தேர்வு கணினி வழியில் நடத்தப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., புது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு நவம்பர் 12ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

நிர்வாகம் : மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை

மேலாண்மை : மாநில அரசு

மீன் வளத்துறையில் ஆய்வாளர் வேலை...!

பணி விவரம்

Ø மீன் துறை ஆய்வாளர்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 64

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.11.2022

கல்வி தகுதி

மீன்துறை ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி தகுதி அல்லது அதற்கு இணையான படிப்பினை பல்கலைக்கழக மானியக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது பல்கலைக்கழக மானியக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திடம் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

மீன் வளத்துறையில் ஆய்வாளர் வேலை...!

ஊதியம்

மீன் துறை ஆய்வாளர் பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு நிலை 20 இன் படி, ரூ. 37,700 -ரூ. 1,19,500 வரை மாத ஊதியம் பெறுவர்.

நோட் இட் ப்ளீஸ்....!

Ø அறிவிப்பு நாள்: 14.10.2022

Ø இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி

நாள்: 12.11.2022

தேர்வு நாள், நேரம், பாடம்

தாள் -1

கீழ்கண்டவற்றுள் ஏதேனும் ஒன்று

1. மீன்வள அறிவியல் (பட்டப்படிப்புத் தரம்)

2. விலங்கியியல் (முதுகலை பட்டப்படிப்புத் தரம்)

08.02.2023 முற்பகல் 09.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை.

தாள் -2

பகுதி - அ

கட்டாய தமிழ்மொழி தகுதித் தேர்வு (10ம் வகுப்புத் தரம்)

பகுதி -ஆ

பொது அறிவு (பொது அறிவு பட்டப்படிப்புத் தரம்)

திறனாய்வு தேர்வு (10ம் வகுப்பு தரம்)

08.02.2023 பிற்பகல் 02.30 மணி முதல் பிற்பகல் 05.30 வரை நடக்கும். மொத்தம் 510 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.

தாள் II-ல் பகுதி 'அ' வில் குறைந்தபட்ச மதிப்பெண் பெறாத தேர்வர்களின், தாள்-I மற்றும் தாள்-II பகுதி 'ஆ'வின் வினா தாள்கள் மதிப்பீடு செய்யப்படாது. அதாவது தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆவார்.

தாள்-I மற்றும் தாள்-II பகுதி 'ஆ'வில் பெறும் மதிப்பெண்கள் மட்டும் தர நிர்ணயத்திற்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.

வயது வரம்பு

மீன்துறை ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியினர், பட்டியல் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதரவற்ற விதவைகள் பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. ஏனையோர் 1.07.2022 அன்று 32 வயதினை பூர்த்தி அடைந்திருக்கக்கூடாது.

தேர்வு கட்டணம்

Ø பதிவுக் கட்டணம் : ரூ.150/-

Ø தேர்வுக் கட்டணம் : ரூ 150/

www.tnpscexams.in

https://www.tnpsc.gov.in/

chrome extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://tnpsc.gov.in/Document/english/30_2022_INS_ENG.pdf

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://tnpsc.gov.in/Document/tamil/30_2022_INS_TAM.pdf

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Fisheries Inspector Jobs 2022: The Tamil Nadu Government Staff Selection Commission, also known as TNPSC, has released a notification for the post of Fisheries Inspector in the Tamil Nadu Fisheries Department. The examination for this post will be conducted through computer mode only.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+