TNPSC மாவட்ட கல்வி அலுவலர் பணி 2022:தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை பணியில், மாவட்ட கல்வி அலுவலர் (தொகுதி - IC பணி) பதவிக்கான 11 காலிப்பணியிடங்கள் தொடர்பான அறிவிப்பை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. கணினி வழியில் மட்டுமே நடத்தப்படும் இத்தேர்வுக்கு ஜன., 13ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
நிர்வாகம் : தமிழ்நாடு பள்ளிக் கல்விப்பணி(Tamilnadu School Educational Service)
மேலாண்மை : மாநில அரசு

பணி விவரம்
Ø மாவட்ட கல்வி அலுவலர் (District Educational Officer)
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 11
விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.1.2023
கல்வி தகுதி
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை பணியில், மாவட்ட கல்வி அலுவலர் (தொகுதி - IC பணி) பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், பொருளாதாரம், புவியியல், வரலாறு, வணிகம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில், ஏதேனும் ஒன்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் பி.டி., அல்லது பி.எட்., முடித்திருக்க வேண்டும்.
ஊதியம்
மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு நிலை 23 இன் படி, ரூ. 56,900 -ரூ. 2,09,200 வரை மாத ஊதியம் பெறுவர்.
தேர்வு முறை
Ø மாவட்ட கல்வி அலுவலர் காலிப் பணியிடங்களுக்கு முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில், தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.
Ø முதல்நிலைத் தேர்வு 300 மதிப்பெண்களுக்கு கொள்குறி வகை தேர்வாக நடைபெறும். இதில் 175 பொது அறிவு வினாக்கள் மற்றும் 25 கணித வினாக்கள் என, 200 வினாக்கள் கேட்கப்படும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.
Ø முதன்மைத் தேர்வு நான்கு தாள்களாக நடைபெறும். முதல் தாள் தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இது 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். குறைந்தபட்சம் எடுக்க வேண்டிய மதிப்பெண்கள் 40.
Ø இரண்டாம் மற்றும் மூன்றாம் தாள் பொது அறிவு. இது தலா 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதற்கான கால அளவு தலா 3 மணி நேரம்.
Ø நான்காம் தாளில், கல்வி பாடங்களில் இருந்து வினாக்கள் இடம்பெறும். இது 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.
நோட் இட் ப்ளீஸ்....!
Ø அறிவிப்பு நாள்: 14.12.2022
Ø இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 13.1.2023
தேர்வு பாடம்
தாள் -1
1. கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தாள் (பத்தாம் வகுப்புத்தரம் விரிந்துரைக்கும் வகை)
தாள் -2
பொது அறிவு (பட்டப்படிப்புத் தரம் விரிந்துரைக்கும் வகை)
தாள் - 3
பொது அறிவு (பட்டப்படிப்புத் தரம் விரிந்துரைக்கும் வகை)
தாள் - 4
கல்வியியல்(பி.எட் பட்டப்படிப்பிற்கான பாடத்திட்டம்)
கொள்குறி வகை 200 வினாக்கள்
நேர்முகத் தேர்வு மற்றும் ஆவணங்கள்
மொத்தம் 1020 மதிப்பெண்களுக்கு தேர்வுகேட்கப்படும்.
தமிழ் மொழி தேர்வில், 40 மதிப்பெண்கள் கட்டாயம் பெற வேண்டும்.
வயது வரம்பு
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை பணியில், மாவட்ட கல்வி அலுவலர் (தொகுதி - IC பணி) பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியினர், பட்டியல் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதரவற்ற விதவைகள் பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. ஏனையோர் 1.07.2022 அன்று 32 வயதினை பூர்த்தி அடைந்திருக்கக்கூடாது.
தேர்வு கட்டணம்
Ø பதிவுக் கட்டணம் : ரூ.150/-
Ø முதனிலை தேர்வுக் கட்டணம் : ரூ 100/-
Ø முதன்மை எழுத்து தேர்வுக் கட்டணம் : ரூ 200/-
மற்ற பிரிவினருக்கு அரசால் வழங்கப்பட்ட கட்டணம் செலுத்துவதில் இருந்து சலுகை உண்டு.
மறக்காதீங்க...!
Ø இணையவழி விண்ணப்பத்தை 13.1.2023 அன்று இரவு 11.59 மணி வரை மட்டுமே சமர்ப்பிக்க இயலும், அதன் பின்னர் அச்சேவை நிறுத்தப்படும்.
Ø தகுதி, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு சலுகை, இதர கல்வித் தகுதி போன்ற இன்ன பிற முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்ட ஆங்கிலம், தமிழ் அறிவிப்புகள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
Ø நிர்ணயிக்கப்பட்ட கல்வி தகுதிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
Ø எனவே, நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதிகளை தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் இருந்தால் விண்ணப்பிக்கும் போதே பதவிவேற்றம் செய்ய வேண்டும்.
க்ளிக் ப்ளீஸ்....! ஆல் தி பெஸ்ட்...!
chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://tnpsc.gov.in/Document/english/37_2022_DEO_ENG.pdf
chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://tnpsc.gov.in/Document/tamil/37_2022_DEO_TAM.pdf


Click it and Unblock the Notifications












