TNPSC Bursar recruitment 2022:எம்.பி.ஏ., பட்டம் பெற்றவரா? ரூ.2.05 லட்சம் ஊதியத்தில் நிதியாளர் வேலை...!

TNPSC bursar recruitment 2022

தமிழ்நாடு கல்வி பணிகளின் கீழுள்ள அரசு கலை, அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 5 நிதியாளர் பதவிக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.2.05 லட்சம் வரை மாத ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நிர்வாகம் : தமிழ்நாடு கல்வி பணிகள்(Tamilnadu Educational Service)

மேலாண்மை : மாநில அரசு

கல்வித் துறையில் நிதியாளர் பணி..!

பணி விவரம்

Ø நிதியாளர்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 5

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.12.2022

கல்வி தகுதி

நிதியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பொது நிர்வாகத்தில் முதுகலை (M.A.Public Administration) பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் (MBA) மற்றும் நிதித்துறையில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்

நிதியாளர் பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு நிலை 22 இன் படி, ரூ. 56,100 -ரூ. 2,05,700 வரை மாத ஊதியம் பெறுவர்.

நோட் இட் ப்ளீஸ்....!

Ø அறிவிப்பு நாள்: 11.11.2022

Ø இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 10.12.2022

தேர்வு நாள், நேரம், பாடம்:

தாள் -1

1. பொது நிர்வாகம் (முதுகலை பட்டப்படிப்புத் தரம்)

அல்லது

2. வணிக மேலாண்மை(முதுகலை பட்டப்படிப்புத் தரம்)

10.03.2023 முற்பகல் 09.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை.

தாள் -2

பகுதி - அ

கட்டாய தமிழ்மொழி தகுதித் தேர்வு (10ம் வகுப்புத் தரம்)

பகுதி -ஆ

பொது அறிவு (பொது அறிவு பட்டப்படிப்புத் தரம்)

10.03.2023 பிற்பகல் 02.30 மணி முதல் பிற்பகல் 05.30 வரை நடக்கும். மொத்தம் 510 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.

தாள் II-ல் பகுதி 'அ' வில் குறைந்தபட்ச மதிப்பெண் பெறாத தேர்வர்களின், தாள்-I மற்றும் தாள்-II பகுதி 'ஆ'வின் வினா தாள்கள் மதிப்பீடு செய்யப்படாது. அதாவது தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆவார்.

தாள்-I மற்றும் தாள்-II பகுதி 'ஆ'வில் பெறும் மதிப்பெண்கள் மட்டும் தர நிர்ணயத்திற்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.

வயது வரம்பு

நிதியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியினர், பட்டியல் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதரவற்ற விதவைகள் பிரிவினருக்கு வயது வரம்பு 37; ஏனையோர் 32 வயதினை பூர்த்தி அடைந்திருக்கக்கூடாது.

தேர்வு கட்டணம்

Ø பதிவுக் கட்டணம் : ரூ.150/-

Ø தேர்வுக் கட்டணம் : ரூ 200/

மற்ற பிரிவினருக்கு அரசால் வழங்கப்பட்ட கட்டணம் செலுத்துவதில் இருந்து சலுகை உண்டு.

மறக்காதீங்க...!

இணையவழி விண்ணப்பத்தை 10.12.2022 அன்று இரவு 11.59 மணி வரை மட்டுமே சமர்ப்பிக்க இயலும், அதன் பின்னர் அச்சேவை நிறுத்தப்படும். இன்னும் மூன்று நாள் தான் உள்ளது.

தகுதி, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு சலுகை, இதர கல்வித் தகுதி போன்ற இன்ன பிற முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்ட ஆங்கிலம், தமிழ் அறிவிப்புகள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

தேர்வு செய்யப்படும் முறை

நேரடி ஆட்சேர்ப்பு படி, கணினி வழி தேர்வு நடத்தப்படும். சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்- 11.11.2022

விண்ணப்பிக்கக் கடைசி நாள் - 10.12.2022

விண்ணப்பம் திருத்தம் செய்ய இயலும் நாள்- 15.12.2022 - 17.12.2022

விண்ணப்பத்தில் இணையத்தில் ஆவணங்கள் மாற்றம் / பதிவேற்றம் செய்யக் கடைசி நாள்- 26.02.2023

க்ளிக் ப்ளீஸ்....! ஆல் தி பெஸ்ட்...!

www.tnpscexams.in

https://www.tnpsc.gov.in/

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://tnpsc.gov.in/Document/tamil/32_2022_ BURSAR TAM_1.pdf

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://tnpsc.gov.in/Document/english/32_2022_BURSAR_ENG_1.pdf

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Finance Officer Jobs in Government Colleges 2022: The Tamil Nadu Public Service Commission, known as TNPSC, has released the notification for the post of Finance Officer in Tamil Nadu Education Jobs. The examination for these posts will be held on December 10 through computer mode.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X