TNPSC உளவியல் உதவி பேராசிரியர் பணி 2022:உளவியலில் பட்டம் பெற்றவரா? ரூ.2.05 லட்சத்தில் அரசு வேலை...!

TNPSC assistant professor of psychology recruitment

தமிழ்நாடு அரசின் மருத்துவ பணிகளில் காலியாக உள்ள 24 உளவியல் உதவிப் பேராசிரியர் உடன்கலந்த மருத்துவ உளவியலாளர் பதவிக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு டிசம்பர் 14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

நிர்வாகம் : தமிழ்நாடு மருத்துவ பணிகள்(Tamilnadu medical Service)

மேலாண்மை : மாநில அரசு

உளவியல் உதவி பேராசிரியர் வேலை...!

பணி விவரம்

Ø உளவியல் உதவிப் பேராசிரியர் உடன்கலந்த மருத்துவ உளவியலாளர்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 24 (9 முன்கொணர்வு பணியிடங்கள் உட்பட)

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.12.2022

கல்வி தகுதி

உளவியல் உதவி பேராசிரியர் உடன் கலந்த மருத்துவ உளவியலாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் M.A அல்லது B.A (Hons) அல்லது B.Sc (Hons) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அகில இந்திய மன நல கல்வி நிறுவனம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம், பல்கலைக்கழகத்தில், மருத்துவ மற்றும் சமூக உளவியலில் முதுகலை அல்லது பகுதி II டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

ஊதியம்

உளவியல் உதவி பேராசிரியர் உடன் கலந்த மருத்துவ உளவியலாளர் பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு நிலை 22 இன் படி, ரூ. 56,100 -ரூ. 2,05,700 வரை மாத ஊதியம் பெறுவர்.

உளவியல் உதவி பேராசிரியர் வேலை...!

நோட் இட் ப்ளீஸ்....!

Ø அறிவிப்பு நாள்: 15.11.2022

Ø இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 14.12.2022

தேர்வு நாள், நேரம், பாடம்:

தாள் -1

1. உளவியல் (முதுகலை பட்டப்படிப்புத் தரம்)

14.03.2023 முற்பகல் 09.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை.

தாள் -2

பகுதி - அ

கட்டாய தமிழ்மொழி தகுதித் தேர்வு (10ம் வகுப்புத் தரம்)

பகுதி -ஆ

பொது அறிவு (பொது அறிவு பட்டப்படிப்புத் தரம்)

14.03.2023 பிற்பகல் 02.30 மணி முதல் பிற்பகல் 05.30 வரை நடக்கும். மொத்தம் 510 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.

தாள் II-ல் பகுதி 'அ' வில் குறைந்தபட்ச மதிப்பெண் பெறாத தேர்வர்களின், தாள்-I மற்றும் தாள்-II பகுதி 'ஆ'வின் வினா தாள்கள் மதிப்பீடு செய்யப்படாது. அதாவது தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆவார்.

தாள்-I மற்றும் தாள்-II பகுதி 'ஆ'வில் பெறும் மதிப்பெண்கள் மட்டும் தர நிர்ணயத்திற்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.

வயது வரம்பு

உளவியல் உதவி பேராசிரியர் உடன் கலந்த மருத்துவ உளவியலாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியினர், பட்டியல் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதரவற்ற விதவைகள் பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. ஏனையோர் 1.07.2022 அன்று 37 வயதினை பூர்த்தி அடைந்திருக்கக்கூடாது.

தேர்வு கட்டணம்

Ø பதிவுக் கட்டணம் : ரூ.150/-

Ø தேர்வுக் கட்டணம் : ரூ 200/

மற்ற பிரிவினருக்கு அரசால் வழங்கப்பட்ட கட்டணம் செலுத்துவதில் இருந்து சலுகை உண்டு.

மறக்காதீங்க...!

இணையவழி விண்ணப்பத்தை 14.12.2022 அன்று இரவு 11.59 மணி வரை மட்டுமே சமர்ப்பிக்க இயலும், அதன் பின்னர் அச்சேவை நிறுத்தப்படும். இன்னும் மூன்று நாள் தான் உள்ளது.

தகுதி, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு சலுகை, இதர கல்வித் தகுதி போன்ற இன்ன பிற முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்ட ஆங்கிலம், தமிழ் அறிவிப்புகள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

நிர்ணயிக்கப்பட்ட கல்வி தகுதிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

னவே, நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதிகளை தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் இருந்தால் விண்ணப்பிக்கும் போதே பதவிவேற்றம் செய்ய வேண்டும்.

க்ளிக் ப்ளீஸ்....! ஆல் தி பெஸ்ட்...!

www.tnpscexams.in

https://www.tnpsc.gov.in/

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://tnpsc.gov.in/Document/tamil/33_2022_AP_PSY_TAM.pdf

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://tnpsc.gov.in/Document/english/33_2022_AP_PSY_ENG.pdf

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamilnadu Government Staff Selection Commission known as TNPSC has released the notification for the post of Assistant Professor of Psychology and Associate Clinical Psychologist in Tamil Nadu Medical Services. The examination for this post will be conducted through computer mode only.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+