cuddalore medical office Recruitment 2023
கடலூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில், துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகத்தில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர், நர்ஸ் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு, பிப்.,25 விண்ணப்பிக்கலாம் என, அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிர்வாகம் : கடலுார் மாவட்ட துணை இயக்குனர் அலுவலகம்
மேலாண்மை : மாநில அரசு

பணி விவரம்
v மருத்துவ அலுவலர்
v செவிலியர்
v பல்நோக்கு சுகாதார மேற்பார்வையாளர்
v அடிப்படை பணியாளர்கள்
v தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator )
v பல் மருத்துவ உதவியாளர்கள்
v மாவட்ட தர ஆலோசகர்
v நகர சுகாதார மேலாளர்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 25.02.2023
பணியிடங்கள் எண்ணிக்கை: 34
நோட் இட் ப்ளீஸ்...!
விண்ணப்பங்கள் தொடங்கிய தேதி : 04-02-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 25-02-2023
ஊதியம்
v மருத்துவ அலுவலர் - ரூ.60,000
v செவிலியர் - ரூ.18,000
v பல்நோக்கு சுகாதார மேற்பார்வையாளர் - ரூ.14,000
v அடிப்படை பணியாளர்கள் - ரூ.8,500
v தரவு உள்ளீட்டாளர் - ரூ.13,500
v வட்டார தரவு உள்ளீட்டாளர் - ரூ.13,500
v பல் மருத்துவ உதவியாளர்கள் - ரூ.10,475
v மாவட்ட தர ஆலோசகர் - ரூ.40,000
v நகர சுகாதார மேலாளர் - ரூ.25,000
கல்வித்தகுதி
மருத்துவ அலுவலர்
MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்
செவிலியர் GNM டிப்ளமோ அல்லது /B.SC Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பல்நோக்கு சுகாதார மேற்பார்வையாளர்
2 வருட Multipurpose Health Inspector Training பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
அடிப்படை பணியாளர்கள்
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தரவு உள்ளீட்டாளர்
கணிதத்தில் இளங்கலைப் பட்டம் / computer applications பாடத்தில் 1 வருட டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு பெற்றிருக்க வேண்டும்.
வட்டார தரவு உள்ளீட்டாளர்
கணிதத்தில் இளங்கலைப் பட்டம் / computer applications பாடத்தில் 1 வருட டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு பெற்றிருக்க வேண்டும்.
பல் மருத்துவ உதவியாளர்கள்
12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் Dental Hygiene/Dental Mechanic பட்டயப் பயிற்சி
மாவட்ட தர ஆலோசகர்
பல் மருத்துவர் / ஆயுஷ் / செவிலியர் / சமூக அறிவியல் / வாழ்வியல் பிரிவுகளில் முதுகலைப் பட்டம் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம்
நகர சுகாதார மேலாளர்
B.Sc., Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
விண்ணப்பிக்க விரும்புவர்கள் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
நோட் இட் ப்ளீஸ்...!
தகுதியான நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் மாதிரியை பதிவிறக்கம் செய்து, அவற்றை பூர்த்தி செய்து, பணிக்கு தேவையான கோரப்பட்ட அனைத்து சான்றிதழ்களின் நகல்களில் சுய ஒப்பமிட்டு இணைத்து 25.02.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
அலுவலக வேலை நாள்களில், விண்ணப்பப் படிவத்தினை பெற்று கொண்டு, நேரிலோ அல்லது விரைவு தபாலிலோ அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
உறுப்பினர் செயலர்/துணை இயக்குநா்,
சுகாதாரப் பணிகள் அலுவலகம்,
மாவட்ட நலவாழ்வு சங்கம்,
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்,
05, பீச் ரோடு,
கடலூர் 607 001.
Ø பணிகள் முற்றிலும் தற்காலிகமானது.
Ø எந்தவொரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
ஒப்பந்த அடிப்படையில் பணி புரிவதற்கு 25.02.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்கள் மேற்குறிப்பிட்ட முகவரிக்கு வந்து சேரும் வண்ணம் அனுப்ப வேண்டும். அதன் பின், வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.
மிஸ் பண்ணிடாதீங்க...! டவுன்லோடு ப்ளீஸ்...!
https://cuddalore.nic.in/notice_category/recruitment/
என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்ய வேண்டும். இருப்பினும் கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


Click it and Unblock the Notifications












