CSIR CECRI: ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்தில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலை வாய்ப்புகள்!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் மத்திய மின் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் Technician பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் மத்திய மின் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் Technician பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தது. ரூ.50 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணிக்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில் தற்போது கால அவகாசத்தினை நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்தில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : மத்திய மின் இரசாயன ஆராய்ச்சி நிறுவனம் (CECRI)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 54

பணி : Technical Assistant மற்றும் Technician

கல்வித் தகுதி :

Technician பணிக்கு தொடர்புடைய பிரிவில் ஐடிஐ தேர்ச்சி அல்லது National, State Trade Certificate பெற்றிருக்க வேண்டும்.

Technical Assistant பணிக்கு டிப்ளமோ, பி.எஸ்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் ஒரு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 27.09.2021 தேதியின்படி 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.28,216 முதல் அதிகபட்சம் ரூ.50,448 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 12.10.2021 தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த அவகாசம் 30.11.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அவற்றோடு 15.12.2021 அன்றுக்குள் அதன் நகலினை உரிய முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Controller of Administration, CSIR-Central Electrochemical Research Institute, Karaikudi-630003, Tamil Nadu

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500
  • எஸ்.சி, எஸ்.டி. பிற்படுத்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 12.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை: விண்ணப்பதாரர் Skill/ Trade Test மற்றும் எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.cecri.res.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Applications are Invited for Technical Assistant and Technician post at CECRI
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+