அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Research Associate பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.45 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு எம்.எஸ்சி, எம்.இ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம்
பணி : Research Associate
மொத்த காலிப் பணியிடங்கள் : 01
கல்வித் தகுதி :
- அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Physics/ Materials science/ Chemistry/ Nanoscience ஆகிய பாடங்களில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (அல்லது)
- Electronics/ Materials Science/ Nanoscience பாடங்களில் M.E./M.Tech தேர்ச்சி பெற்று Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.45,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 16.08.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Director, Crystal Growth Centre, Anna University, Chennai - 600 025
தேர்வு முறை : நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.annauniv.edu அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள முகவரியினைக் காணவும்.


Click it and Unblock the Notifications












