8-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அண்ணாபல்கலையில் பணியாற்றலாம் வாங்க!

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப வணிகமயமாக்கல் நிர்வாகி, திட்ட இணை உதவியாளர், திட்ட உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

 
8-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அண்ணாபல்கலையில் பணியாற்றலாம் வாங்க!

நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம் (Anna University)

மொத்த காலிப் பணியிடங்கள் : 07

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:

  • தொழில்நுட்ப வணிகமயமாக்கல் நிர்வாகி - 02
  • திட்ட இணை உதவியாளர் - 02
  • திட்ட உதவியாளர் - 02
  • அலுவலக உதவியாளர் - 01

கல்வித் தகுதி :

தொழில்நுட்ப வணிகமயமாக்கல் நிர்வாகி - பி.இ, பி.டெக் தேர்ச்சியுடன் எம்பிஏ படித்திருக்க வேண்டும். மேலும், 8 வருட பணி அனுபவம் அவசியம்.

திட்ட இணை உதவியாளர் - பி.இ, பி.டெக், எம்பிஏ, எம்சிஏ, எம்.எஸ்சி தேர்ச்சி பெற்று 5 வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

திட்ட உதவியாளர் - பி.இ, பி.காம், பி.இ, பி.டெக், MCA, M.Com, M.Sc படித்திருக்க வேண்டும். மேலும், 2 வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர் - 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும். மேலும், 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் :

  • தொழில்நுட்ப வணிகமயமாக்கல் நிர்வாகி - ரூ.50,000
  • திட்ட இணை உதவியாளர் - ரூ.40,000
  • திட்ட உதவியாளர் - ரூ.20,000
  • அலுவலக உதவியாளர் - ரூ.16,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 25.09.2021அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : DIRECTOR, CENTRE FOR TECHNOLOGY DEVELOPMENT AND TRANSFER ANNA UNIVERSITY, CHENNAI - 600 025

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.annauniv.edu அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள முகவரியினைக் காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Anna University Recruitment 2021: Apply for Project Associate, driver, Assistant & other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X