அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு 8-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம்
பணி : அலுவலக உதவியாளர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 06
கல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து இப்பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ஊதியம் : ரூ.391 (நாள் ஒன்றுக்கு)
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.annauniv.edu/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 19.09.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Dean, The Registrar, Anna University, Chennai - 600 025.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 19.09.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் குறுகிய பட்டியல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.annauniv.edu அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள முகவரியினைக் காணவும்.


Click it and Unblock the Notifications












