அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள மூத்த இணைப்பாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு எம்பிஏ துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் ஜூன் 25ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம்
பணி : மூத்த இணைப்பாளர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 01
கல்வித் தகுதி : எம்பிஏ துறையில் தேர்ச்சிபெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ. 25,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.annauniv.edu என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதனை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.06.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.annauniv.edu அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள முகவரியினைக் காணவும்.


Click it and Unblock the Notifications












