அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : அண்ணா பல்கலைக்கழகம், சென்னை
பணி : உதவியாளர் (தற்காலிகம்)
மொத்த காலியிடங்கள் : 8
தேர்வு முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 22 ஆகஸ்ட் 2019
விண்ணப்பிக்கும் முறை : அஞ்சல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
Additional Controller of Examinations (University Departments),
Bi-Centennial Building, CEG Campus,
Anna University, Chennai - 600 025
பணி மற்றும் பணியிட விபரங்கள் விபரங்கள் :
புரொபஷனல் அசிஸ்டெண்ட்
காலியிடங்கள் : 4
பணிக் காலம் : 6 மாதங்கள்
கல்வித் தகுதி : பிரிவு 1 - பி.இ கம்ப்யூட்டர் /பி.டெக் ஐடி, பிரிவு 2 - எம்சிஏ / எம்பிஏ / எம்.காம் / எம்எஸ்சி
ஊதியம் :
பிரிவு I - ஒரு நாளைக்கு 736 ரூபாய்,
பிரிவு II - ஒரு நாளைக்கு 690 ரூபாய்
கிளரிக்கல் அசிஸ்டெண்ட்
கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டப்படிப்பு, கணினி அறிவு, தட்டச்சு அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.
காலியிடங்கள் : 4
பணிக்காலம் : 6 மாதங்கள்
ஊதியம் : ஒரு நாளைக்கு 434 ரூபாய்
மேற்கண்ட பணிகளில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களது புகைப்படம், கையெழுத்துடன் சுயவிவரங்கள் இணைத்து, Additional Controller of Examinations (University Departments), Bi-Centennial Building, CEG Campus, Anna University, Chennai - 600 025 எனும் முகவரிக்கு, ஆகஸ்ட் 22ம் தேதி, மாலை 5.00 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்களில் தகுதியுடையவர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்த விபரங்கள், விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமான தெரிவிக்கப்படும்.
நேர்முகத் தேர்வுக்கு வரும் போது விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் சான்றிதழ்களைக் கொண்டு வர வேண்டும். அரசுப் பணி தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள், இந்த பணிக்கும் விண்ணப்பித்து முயற்சிக்கலாம். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய விரும்புவோர் அண்ணா பல்கலை வெளியிட்டுள்ள அறிவிப்பினைக் காண https://drive.google.com/file/d/1ftQp_AjpG9C8E9otf7_mKoMuL9Fuc-Ji/view என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












