அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்போது காலியாக உள்ள புராஜக்ட் அசோசியேட் (Project Associate - I) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு https://www.annauniv.edu/pdf/Advertisement and Application Form_SERB-SURE_PA-I_28.12.2023.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
தமிழகத்தில் மிகவும் பிரபலமாக இருப்பது அண்ணா பல்கலைக்கழகம். மாநிலத்தில் உள்ள அனைத்து தொழில்நுட்பக் கல்லூரிகளையும் இணைத்து சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள மதுரை, கோவை, விழுப்புரம், நாகர்கோவில், துாத்துக்குடி, காஞ்சிபுரம் உட்பட 16 அண்ணா பல்கலைக்கழக இன்ஜினியரிங் கல்லுாரிகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அண்ணா பல்கலைக்கழகம் (Anna University) இந்தியாவின், தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. 1978-ம் ஆண்டில், சென்னையில் நிறுவப்பட்ட இந்த பல்கலைக்கழகம், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அதன் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புகள் வழங்குவதுடன் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொள்கிறது.

தன் முதன்மை வளாகம் சென்னையின் கிண்டியிலும், செயற்கைக்கோள் வளாகம் சென்னையின் குரோம்பேட்டையிலும் அமைந்து உள்ளன.
மேலும், நாட்டில் உள்ள தொழி்லநுட்ப பல்கலைக்கழக நிறுவன தரவரிசை கட்டமைப்பானது, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை பத்தாவது இடத்தில் அமர்ந்திருக்கிறது. மேலும் பல்கலை கழகங்களுள் நான்காவது இடத்திலும், பொறியியலில் எட்டாவது இடத்திலும் தரவரிசைப்படுத்திருகிறது. முதன்மை வளாகத்தில் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி, கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளி மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தின் மூன்று தொழில்நுட்ப துறைகளும் உள்ளடங்கி உள்ளன. சென்னை தொழில்நுட்ப நிறுவன வளாகம் குரோம்பேட்டையில் அமைந்துள்ளது.
1978-ம் ஆண்டு, செப்டம்பர் 4-ல், சென்னையின் பழம்பெரும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி, மெட்ராசு தொழில்நுட்ப கழகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒற்றைப் பல்கலைக்கழகமாக பேரறிஞர் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.
பின்னர் 1982 -ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என்னும் பெயரிலிருந்து 'பேரறிஞர்' மற்றும் 'தொழில்நுட்ப' ஆகிய சொற்கள் நீக்கப்பட்டு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் மாற்றப்பட்டது.
2001-ம் ஆண்டு டிசம்பர் முதல் ஏறக்குறைய தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்ட பின்னர் ஒருங்கிணைந்த அண்ணா பல்கலைக்கழகமாக, அண்ணா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.
2007-ம் ஆண்டு: நிர்வாக வசதிகளுக்காக ஜனவரி முதல் அண்ணா பல்கலைக்கழகம் 6 பல்கலைக்கழகங்களாகச் செயல்பட்டு வந்தது
அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - கிண்டி வளாகம்
அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - தரமணி வளாகம்
அண்ணா பல்கலைக்கழகம் சென்னை - மண்டல அலுவலகம், திருச்சிராப்பள்ளி
அண்ணா பல்கலைக்கழகம் சென்னை - மண்டல அலுவலகம் திருநெல்வேலி
அண்ணா பல்கலைக்கழகம் சென்னை - மண்டல அலுவலகம் மதுரை
அண்ணா பல்கலைக்கழகம் சென்னை - மண்டல அலுவலகம், கோயம்புத்தூர் என 6 மண்டலங்களாக இருந்தன.
பின்னர் 2007-ம் ஆண்டில் அனைத்து அண்ணா பல்கலைக் கழகங்களையும் ஒருங்கிணைக்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒன்றாக மாற்றப்பட்டது.
2012-ம் ஆண்டு ஆகஸ்ட் 1 முதல் அனைத்து அண்ணா பல்கலைக்கழகங்கள் மற்றும் வளாகங்களும், அண்ணா பல்கலைகழகத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது.
இந்த பெருமைமிகு அண்ணா பல்கலைக்கழகத்தில் தான் தற்போது புராஜக்ட் அசோசியேட் (Project Associate - I) பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலிப்பணியிடங்கள்:
அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Project Associate - I பணிக்கென ஒரேயொரு பணியிடம் காலியாக உள்ளது.
புராஜக்ட் அசோசியேட் (Project Associate - I) பணியிடங்களுக்கான கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் இன்ஜினியரிங் பட்டமேற்படிப்பு (Bachelor's or Master's Degree in Engineering) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பதாரர்கள் Engineering -ல் CSE / IT / ECE பிரிவில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புராஜக்ட் அசோசியேட் (Project Associate - I) பணியிடங்களுக்கான வயதுத்தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடலாம்.
புராஜக்ட் அசோசியேட் (Project Associate - I) பணியிடங்களுக்கான ஊதிய விவரம்:
இந்தப் ணிக்கு நேர்காணல் மூலம் செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.25,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புராஜக்ட் அசோசியேட் (Project Associate - I) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை, கடைசி தேதி:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] என்ற அதிகாரபூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.1.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
இணையதள முகவரி:
கூடுதல் விவரங்களுக்கு https://www.annauniv.edu/pdf/Advertisement and Application Form_SERB-SURE_PA-I_28.12.2023.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.


Click it and Unblock the Notifications












