அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University) காலியாக உள்ள ரூசா ஃபீல்டு மேலாளர்(RUSA Field Manager) பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.
கூடுதல் விவரங்களுக்கு https://auced.com/recruitment/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
தமிழகத்தின் மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களுள் ஒன்றாக அறியப்படுவது அண்ணா பல்கலைக்கழகம். எத்தனையோ மேதைகளை உருவாக்கித் தந்த இந்தக் கல்வி நிறுவனம் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பட்டதாரி இன்ஜினீயர்களை தயார் செய்கிறது.
1978 ஆம் ஆண்டு, செப்டம்பர் 4-ம் தேதி, சென்னையின் பழம்பெரும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி, மெட்ராசு தொழில்நுட்ப கழகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒற்றைப் பல்கலைக்கழகமாக பேரறிஞர் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டு வெற்றி நடை போட்டு வருகிறது.

தலைநகர் சென்னையில் பெருமையுற அமைந்துள்ள இந்த அண்ணா பல்கலைக்கழகம் (Anna University) இந்தியாவின், தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக தலைநிமிர்ந்து நிற்கிறது.
1978ஆம் ஆண்டில், சென்னையில் நிறுவப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அதன் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புகள் வழங்குவதுடன் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொண்டு அசத்தி வருகிறது. இதன் முதன்மை வளாகம் சென்னையின் கிண்டியிலும், துணைக்கோள் வளாகம் சென்னையின் குரோம்பேட்டையிலும் எழிலுற அமைந்து உள்ளன.
நாட்டிலுள்ள உயர்கல்வி நிறுவனங்கள் தரவரிசையில் இந்த பல்கலைக்கழகம் 10-வது இடத்தில் உள்ளது. மேலும் பல்கலைக்கழகங்களுள் நான்காவது இடத்திலும், பொறியியலில் எட்டாவது இடத்திலும் தரவரிசைப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த பெருமைமிகு அண்ணா பல்கலைக்கழகத்தில் நான் (Anna University) தற்போது ரூசா ஃபீல்டு மேலாளர்(RUSA Field Manager) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரூசா ஃபீல்டு மேலாளர்(RUSA Field Manager) பணியிடத்துக்கான கல்வி தகுதி:
ரூசா ஃபீல்டு மேலாளர்(RUSA Field Manager) பணியிடத்துக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் எம்.இ, எம்.டெக் (ME, M.Tech) பட்டம் பெற்றவராக இருத்தல் அவசியம்.
ரூசா ஃபீல்டு மேலாளர்(RUSA Field Manager) பணியிடத்துக்கான அனுபவத்தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 2 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருத்தல் அவசியம்.
ரூசா ஃபீல்டு மேலாளர்(RUSA Field Manager) பணியிடத்துக்கான ஊதியம்:
அண்ணா பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.50,000/- மாத ஊதியமாக பெறுவர்.
தேர்வு முறை:
ரூசா ஃபீல்டு மேலாளர்(RUSA Field Manager) பணியிடத்துக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்த விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 6.1.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு https://auced.com/recruitment/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
விண்ணப்பம், விளம்பரம் தொடர்பான அறிவிப்பைக் காண https://www.annauniv.edu/pdf/RUSA_Recruitment_CED.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.


Click it and Unblock the Notifications












