அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் பெல்லோ(Junior Research Fellow) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு https://www.annauniv.edu/pdf/jrf-notification_cse.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
தமிழகத்தின் பெருமைமிக்க உயர்கல்வி நிறுவனங்களுள் ஒன்றாக அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய 2 படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தின் மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களுள் ஒன்றாக அறியப்படுவது அண்ணா பல்கலைக்கழகம். எத்தனையோ மேதைகளை உருவாக்கித் தந்த இந்தக் கல்வி நிறுவனம் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பட்டதாரி இன்ஜினீயர்களை தயார் செய்கிறது.
1978 ஆம் ஆண்டு, செப்டம்பர் 4-ம் தேதி, சென்னையின் பழம்பெரும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி, மெட்ராசு தொழில்நுட்ப கழகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒற்றைப் பல்கலைக்கழகமாகப் பேரறிஞர் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டு வெற்றி நடை போட்டு வருகிறது.
தலைநகர் சென்னையில் பெருமையுற அமைந்துள்ள இந்த அண்ணா பல்கலைக்கழகம் (Anna University) இந்தியாவின், தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக தலைநிமிர்ந்து நிற்கிறது. 1978ஆம் ஆண்டில், சென்னையில் நிறுவப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அதன் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புகள் வழங்குவதுடன் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொண்டு அசத்தி வருகிறது.

இதன் முதன்மை வளாகம் சென்னையின் கிண்டியிலும், துணைக்கோள் வளாகம் சென்னையின் குரோம்பேட்டையிலும் எழிலுற அமைந்து உள்ளன. நாட்டிலுள்ள உயர்கல்வி நிறுவனங்கள் தரவரிசையில் இந்த பல்கலைக்கழகம் 10-வது இடத்தில் உள்ளது. மேலும் பல்கலைக்கழகங்களுள் நான்காவது இடத்திலும், பொறியியலில் எட்டாவது இடத்திலும் தரவரிசைப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த பெருமைமிகு அண்ணா பல்கலைக்கழகத்தில்தான் தற்போது ஜூனியர் ரிசர்ச் பெல்லோ(Junior Research Fellow) பணியிடங்கள் காலியாக உள்ளன.
ஜூனியர் ரிசர்ச் பெல்லோ(Junior Research Fellow) பணியிடத்துக்கான கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் எம்.இ., எம்.டெக் (M.E/M.Tech) தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
ஜூனியர் ரிசர்ச் பெல்லோ(Junior Research Fellow) பணியிடத்துக்கான வயது வரம்பு
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பைக் காணலாம்.
ஜூனியர் ரிசர்ச் பெல்லோ(Junior Research Fellow) பணியிடத்துக்கான ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.31,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூனியர் ரிசர்ச் பெல்லோ(Junior Research Fellow) பணியிடத்துக்கு தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 5.1.2024-ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு https://www.annauniv.edu/pdf/jrf-notification_cse.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.


Click it and Unblock the Notifications












