Anna Universtiy Gym trainers Recruitment 2023: ஜிம் பயிற்சியாளருக்கு ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் வேலை...?

அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.45 ஆயிரத்தில் வேலை

அண்ணா பல்கலைக்கழகத்தில் விளையாட்டு வாரியத்தில் காலியாக உள்ள ஜிம் ட்ரெயினர் பணியிடங்களுக்கு, பகுதி நேர அடிப்படையில் ஊழியர்கள் நியமனத்துக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை, அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

தகுதி, ஆர்வமுள்ள நபர்கள் ஜூலை 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

நிர்வாகம் : விளையாட்டு வாரியம், அண்ணா பல்கலைக்கழகம்.

மேலாண்மை : மாநில அரசு

அண்ணா பல்கலையில் ஜிம் ட்ரெயினர் பணி …!

பணி விவரம்

Ø Gym Trainer

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.07.2023

கல்வித் தகுதி

பட்டப்படிப்பில் ஏதேனும் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவத்தை பொறுத்தவரை, ஜிம் பராமரிப்பு, உடற்தகுதி பயிற்சி சார்ந்து படிப்பில் தேர்ச்சி பெற்று, அதற்குரிய சான்றிதழை பெற்றிருத்தல் அவசியம். மேலும் இரண்டு ஆண்டுகள் ஜிம் ட்ரெயினர் பணி அனுபவத்தை பெற்றிருக்க வேண்டும். அதுகுறித்த அறிவிப்பை, கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வாயிலாக அறிந்து கொள்ளவும்.

ஊதியம் : பணிக்கு ஏற்றவாறு தொகுப்பூதியமாக, ரூ. 15,000 முதல் ரூ.20,000 வரை வழங்கப்படும்.

தேர்வு முறை

இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தகுதியான விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

நோட் இட் ப்ளீஸ்...!

இந்த பணியிடங்கள் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் நிரப்படும். பணியின் காலம் ஆறு மாதம்.

மறக்காதீங்க...!

Ø விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து, அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கோரப்பட்ட தகவல், அது சார்ந்த சான்றிதழுடன் இணைத்து அனுப்பி வைக்க வேண்டும்.

26.07.2023 ஆம் தேதி மாலை 5:00 மணிக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டும் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

Ø நேர்காணல் நடக்கும் நாளில் விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்களை உடன் எடுத்த வர வேண்டும்.

Ø தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான நேர்காணல் நடக்கும் நாள் மற்றும் தேதி குறித்த அறிவிப்பு, அவர்களின் மின்னஞ்சல் வாயிலாக தெரியப்படுத்தப்படும்.

Ø சொந்த செலவில் தான் நேர்காணலில் பங்கேற்க வேண்டும். இதற்கான செலவு தொகை எதையும் கோர முடியாது. சிபாரிசு கடிதத்துடன் பணி வாய்ப்பு கோருபவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

The Chairman,

Anna University Sports Board,

Anna University,

Chennai 600025.

என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

க்ளிக் ப்ளீஸ்....!

https://www.annauniv.edu/events.php

https://www.annauniv.edu/index.php

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
An announcement has been made to appoint gym trainers on a part-time basis in the sports board section of Anna University, which has secured 56.22 points in the national ranking list and is ranked 20th in the all-India ranking.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+