உலகின் மிகப்பெரிய தனியார் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் (Amazon) நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பி பயன் பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு
https://www.amazon.jobs/en/jobs/2510058/it-support-associate-ii-opstech-it-service-desk என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
அமேசான் என்பது அமெரிக்காவின் பன்னாட்டு இணைய வணிக நிறுவனமாகும். இது சியாட்டல், வாஷிங்டனில் அமைந்து உள்ளது. இது அமேரிக்காவிலேயே இருக்கும் ஒரு மிகப்பெரிய இணைய அங்காடி நிறுவனமாகும். இதன் இணைய விற்பனை ஸ்டெப்பிள்ஸ் நிறுவனத்தினை விட மூன்று மடங்கு அதிகமாகும்
ஜெப் பெசோஸ் என்பவர் அமேசான் நிறுவனத்தை 1994ல் தொடங்கி, 1995ஆம் ஆண்டு இணையத்தில் வெளியிட்டார். பின்னர் இது ஒரு இணையப் புத்தக அங்காடியாகத் தொடங்கப்பட்டது.

விரைவில் பலத்தரப்பட்ட பொருள்களை விற்பனை செய்ய ஆரம்பித்தது. அவை டி.வி.டி, இசை குறுந்தட்டுகள் மற்றும் எம்.பி3 சிடிக்கள், கணினி மென்பொருகள், விழி விளையாட்டுகள், எலெக்டிரானிக்சுகள், துணிகள், உணவுகள் மற்றும் பொம்மைகள் என பலதரப்பட்ட பொருட்களை விற்பனை செய்தது.
பின்னர் அமேசான் தனக்கென தனியான தளத்தினை முக்கிய நாடுகளில் நிறுவத் தொடங்கியது. அவை கனடா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், சீனா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆகும்.
சர்வதேச அளவில் பொருட்களை தனது வாடிக்கையாளர்களுக்கு எடுத்துச்செல்லும் நிறுவனமாக இது அமைந்துள்ளது.
இந்தியாவில் 2013-ம் ஆண்டில் தனது சேவையை அமேசான் நிறுவனம் தொடங்கியது. நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் அலுவலகங்களை நிறுவி சேவையை வழங்கி வருகிறது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பையும் நிறுவனம் வழங்கி வருகிறது.
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான அமேசான் அடுத்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவில் கூடுதலாக 15 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்ய உறுதியளித்துள்ளது. இது அனைத்து வணிகங்களிலும் நிறுவனத்தின் மொத்த இந்திய முதலீட்டை $26 பில்லியன்களாக உயர்த்தும்.
அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி கூறும்போது, "10 மில்லியன் சிறு வணிகங்களை டிஜிட்டல் மயமாக்கவும், 20 பில்லியன் டாலர் ஏற்றுமதியை செயல்படுத்தவும், 2025 ஆம் ஆண்டளவில் இந்தியாவில் இரண்டு மில்லியன் வேலைகளை உருவாக்கவும் உறுதியளித்துள்ளோம்.. அமேசான் ஏற்கனவே 11 பில்லியன் டாலரை இந்தியாவில் முதலீடு செய்துள்ளது.
தற்போது, அமேசான் இந்தியா, ஏற்கனவே 6.2 மில்லியனுக்கும் அதிகமான சிறு வணிகங்களை டிஜிட்டல் மயமாக்கி, $7 பில்லியனுக்கும் அதிகமான ஏற்றுமதிகளை செயல்படுத்தி, 1.3 மில்லியனுக்கும் அதிகமான நேரடி மற்றும் மறைமுக வேலைகளை உருவாக்கி, அவற்றை வழங்குவதற்கான பாதையில் உள்ளது" என்று தெரிவிக்கிறார்.
வெறும் 100 விற்பனையாளர்களுடன் தொடங்கிய அமேசான் சமீபத்தில் இந்தியாவில் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இன்று, 12 லட்சத்துக்கும் அதிகமான இந்திய வணிகங்களுக்கு ஆன்லைனில் கோடிக்கணக்கான பொருட்களை விற்கவும், நாடு முழுவதும் டெலிவரி செய்யவும் இது அதிகாரம் வழங்கியுள்ளது.
இந்த பெருமை மிகு அமேசான் நிறுவனத்தில் தான் ஐடி சப்போர்ட் அசோசியேட், ஓபிஎஸ்டெக் ஐடி - சர்வீஸ் டெஸ்க் (IT Support Associate II, OPSTech IT -Service Desk) போன்ற பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கு CompTIA A+, CompTIA Network+, Cisco/CCNA, Linux (Redhat), Microsoft hardware (installation), AWS தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்தப் பணியிடங்களுக்கான வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பில் காணமுடியும்.
மேலும் இந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள், corporate setting Windows, Mac or Linux Operating systems support-ல் 1 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு அமேசான் (Amazon) நிறுவன நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் ஸ்கில் டெஸ்ட் (Skill Test0, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
கூடுதல் விவரங்களுக்கு
https://www.amazon.jobs/en/jobs/2510058/it-support-associate-ii-opstech-it-service-desk என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












