மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய செயற்கை மூட்டுகள் உற்பத்தி கழகத்தில் (ALIMCO) காலியாக உள்ள பொது மேலாளர், மூத்த மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 33 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ஐடிஐ, டிப்ளமோ உள்ளிட்ட துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய செயற்கை மூட்டுகள் உற்பத்தி கழகம் (ALIMCO)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 33
பணி :
பொது மேலாளர், மூத்த மேலாளர், இணை மேலாளர், உதவி மேலாளர், Officer, Accountant, Shop Assistant, CNC Operator, QC Assistant, Tool மற்றும் Die Maker, Painter, Workman உள்ளிட்ட 33 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஐடிஐ, டிப்ளமோ, ICWA, MBA, B.E மற்றும் ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 01.12.2021 தேதியின்படி 30 முதல் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.17,100 முதல் ரூ.2,60,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.alimco.in அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து 18.01.2022 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது விண்ணப்பதாரர்கள் - ரூ.500, 200
- எஸ்.சி, எஸ்டி உள்ளிட்ட விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் கிடையாது.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.alimco.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.


Click it and Unblock the Notifications












