12-வது தேர்ச்சியா? ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை..!

ஜோத்பூரில் செயல்பட்டு வரும் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) காலியாக உள்ள கிளார்க், டேட்டா என்டிரி ஆப்ரேட்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஜோத்பூரில் செயல்பட்டு வரும் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) காலியாக உள்ள கிளார்க், டேட்டா என்டிரி ஆப்ரேட்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயனடையலாம்.

12-வது தேர்ச்சியா? ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை..!

நிர்வாகம் : அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 37

பணி மற்றும் பணியிட விபரம்:

  • மேல் பிரிவு கிளார்க் : 03
  • டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் : 02
  • கீழ் பிரிவு கிளார்க் : 32

மேல் பிரிவு கிளார்க் :-

வயதுவரம்பு : 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கூடுதல் திறன் : கணினியில் பணியாற்றும் திறன் பெற்றிருப்பதுடன் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் ஆங்கிலத்திலும் அல்லது 30 வார்த்தைகள் இந்தியிலும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் :-

வயதுவரம்பு : 18 முதல் 27க்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கூடுதல் திறன் : ஒரு மணி நேரத்திற்கு 8 ஆயிரம் வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்கவேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.25,500 முதல் ரூ. 81,100 வரையில்

கீழ் பிரிவு கிளார்க்:-

ஊதியம் : ரூ.19,900 முதல் ரூ.63,200 வரையில்

வயதுவரம்பு : 18 முதல் 30க்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கூடுதல் திறன் : நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் 30 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் தொழிற்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : www.aiimsjothpur.edu.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு - ரூ.100.
  • எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் - ரூ.200

கட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 2019 ஜனவரி 27

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய www.aiimsjothpur.edu.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
AIIMS Recruitment 2019 - Apply for 37 Vacancies
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X