நாட்டில் உள்ள பல்வேறு எய்ம்ஸ் மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி வாய்ந்த நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
டெல்லியில் உள்ள அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் (All India Institute of Medical Sciences Delhi, AIIMS Delhi) ஓர் உலகப் புகழ்பெற்ற மருத்துவமனையாகும். தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள இந்த மருத்துவமனையானது, அரசு மருத்துவக் கல்லூரியும் மருத்துவ ஆய்வு பல்கலைக்கழகமும் இணையப் பெற்றுள்ளது. 1956-ம் ஆண்டு இந்த நிறுவனம் நிறுவப்பட்டது; தன்னாட்சி பெற்ற இந்த மருத்துவக் கழகம் இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் நேரடி மேற்பார்வையில் இயங்குகின்றது.
இதுமட்டுமல்லாமல் ரிஷிகேஷ், பாட்னா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன.

சமீப ஆண்டுகளில் அசாமின் குவாஹாட்டி முதல் மேற்கு வங்க மாநிலம் கல்யாணி வரையிலும், ஜார்கண்டில் உள்ள தியோகர் முதல் பிகாரில் உள்ள தர்பாங்கா வரையிலும் சிறந்த சுகாதார வசதிகளுடன், மக்கள் சிகிச்சை பெறும் வகையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன.
எய்ம்ஸ் மருத்துவமனைகளில் குரூப் பி, சி பிரிவில் உதவி நிர்வாக அலுவலர், டயட்டீசியன், அசிஸ்டென்ட் இன்ஜினீயர் (சிவில், ஏ.சி., எலக்ட்ரிக்கல்), அசிஸ்டென்ட் லான்ட்ரி சூப்பர்வைசர், அசிஸ்டென்ட் ஸ்டோர் ஆபீஸர், பயோ மெடிக்கல் இன்ஜினீயர், கேஷியர், டென்டிஸ்ட் உட்பட பல்வேறு பதவி நிலைகளில் 3,036 காலி இடங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த இடங்களுக்கான வயது தகுதியும், கல்வித் தகுதியும் பணியிடங்களுக்கு ஏற்ப மாறுபடும்.
இந்தப் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் ஆன்லைன் தேர்வு, ஸ்கில் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கான தேர்வுகள் வரும் டிசம்பர் 18, 20-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பக் கட்டணமாக ரூ. 3000 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் ரூ. 2400 மட்டுமே செலுத்தினால் போதுமானது.
விண்ணப்பங்களை வரும் டிசம்பர் 1-ம் தேதிக்குள் (1.12.2023, மாலை 5:00 மணி) அனுப்பவேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு creaiims.aiimsexams.ac.in என்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொண்டு அறிய முடியும்.


Click it and Unblock the Notifications












