இந்திய இராணுவத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பும் வகையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். நர்சிங் உதவியாளர், சோல்ஜர் ஜெனரல் டூட்டி, சோல்ஜர் டெக்னிக்கல், சோல்ஜர் கிளார் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடம்:-
- சோல்ஜர் நர்சிங் உதவியாளர்
- சோல்ஜர் ஜெனரல் டூட்டி
- சோல்ஜர் டெக்னிக்கல்
- சோல்ஜர் கிளார்க்
கல்வித் தகுதி:-
- சோல்ஜர் நர்சிங் உதவியாளர் : 12ஆம் வகுப்பு தேர்ச்சி, பி.எஸ்சி நர்சிங், பி.ஃபார்ம், நர்சிங் துறையில் டிப்ளமோ, டி.பார்மசி.
- சோல்ஜர் ஜெனரல் டூட்டி : 10 அல்லது 12-ம் வகுப்பு தேர்ச்சி
- சோல்ஜர் டெக்னிக்கல் : 12ஆம் வகுப்பு, டிப்ளமோ தேர்ச்சி
- சோல்ஜர் கிளார்க் : 10 அல்லது 12-ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு:-
17 முதல் 23 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லை முறையில்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : www.joinindianarmy.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : உடல் திறன் சோதனை, உடல் அளவீடு, மருத்துவ பரிசோதனை மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 அக்டோபர் 30
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/BRAVO_NotificationPDF/Mathura_Rally_ARO_Agra_Nov_2018_leaflet.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












