மத்திய அரசின் கீழ் செயல்படும் அட்வான்ஸ்டு சென்டர் பார் டிரீட்மென்ட், ரிசர்ச் & எஜூகேசன் இன் கேன்சர் (ACTREC) நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு actrec.gov.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
மத்திய அரசின் கீழ் செயல்படும் அட்வான்ஸ்டு சென்டர் பார் டிரீட்மென்ட், ரிசர்ச் & எஜூகேசன் இன் கேன்சர் (ACTREC) நிறுவனத்தில்தான் தற்போது வேலையிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது.

இங்கு நர்ஸ் 25, சயின்டிபிக் அசிஸ்டென்ட் 7, இன்ஜினியர் 1, மெடிக்கல் பிசிஸ்ட் 1, டெக்னீசியன் 5, கிளார்க் 3 பணியிடங்கள் உட்பட மொத்தம் 45 இடங்கள் உள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி: பிரிவு வாரியாக பி.எஸ்சி., / எம்.எஸ்சி., / ஐ.டி.ஐ., / பி.இ., முடித்திருக்க வேண்டும்.
வயதுத்தகுதி: 7.3.2024 அடிப்படையில் டெக்னீசியன், கிளார்க் 27, சயின்டிபிக் அசிஸ்டென்ட் 30, மற்ற பணிக்கு 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு / ஸ்கில் தேர்வு / நேர்முகத்தேர்வு முறையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:விண்ணப்பக்கட்டணமாக ரூ. 300 செலுத்தவேண்டும்.
எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் கட்டணம் செலுத்தத் தேவை இல்லை.
கடைசிநாள்: விண்ணப்பங்களை வரும் 7.3.2024-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.
இணையதள முகவரி: கூடுதல் விவரங்களுக்கு actrec.gov.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.


Click it and Unblock the Notifications












