தமிழக அரசிற்கு உட்பட்ட விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் (ஆவின்) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உடையோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிர்வாகம் : விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் (ஆவின்)
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடம் : 07
பணி மற்றும் காலிப் பணியிடம்:-
- சீனியர் பேக்டரி அசிஸ்டண்ட் : 02
- ஓட்டுநர் : 01
- தொழில்நுட்பவியலாளர் : 02
- மேலாளர் : 02
கல்வித் தகுதி :-
- சீனியர் பேக்டரி அசிஸ்டண்ட் : 12-வது தேர்ச்சி
- ஓட்டுநர் : 8-வது தேர்ச்சி
- தொழில்நுட்பவியலாளர் : 10-வது தேர்ச்சி
- மேலாளர் : கால்நடை அறிவியல் துறையில் இளங்கலைப் பட்டம்
வயது வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம்:-
- சீனியர் பேக்டரி அசிஸ்டண்ட் : ரூ. 15,700 முதல் ரூ.50,000 வரையில்
- ஓட்டுநர் : ரூ. 19,500 முதல் ரூ.62,000 வரையில்
- தொழில்நுட்பவியலாளர் : ரூ. 19,500 முதல் ரூ.62,000 வரையில்
- மேலாளர் : ரூ. 55,500 முதல் ரூ.1,75,700 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : http://www.aavinmilk.com/hrvir311218.html
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.aavinmilk.com என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The General Manager, VIRUDHUNAGAR DCMPU, Srivilliputtur Dairy, Madurai Road, Meenakshipuram(P.O), Srivilliputtur - 626125.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 28.01.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மற்றும் வாய்வழித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்:-
- பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் : ரூ. 250
- பிற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் : ரூ. 100
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவதினைப் பெறவும் http://www.aavinmilk.com/hrvir311218.html அல்லது http://www.aavinmilk.com என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












