வேலூர் ஆவின் நிறுவனத்தில் வேலை- விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

தமிழக அரசிற்கு உட்பட்ட ஆவின் நிறுவனத்தின் வேலூர் கிளையில் உள்ள துணை மேலாளர், மூத்த தொழிற்சாலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

பால்வளத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் வேலூர் கிளையில் உள்ள துணை மேலாளர், மூத்த தொழிற்சாலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையுங்கள்.

வேலூர் ஆவின் நிறுவனத்தில் வேலை- விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

நிர்வாகம் : ஆவின்

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 31

பணி மற்றும் காலிப் பணியிடங்கள்:

பணி : இணை மேலாளர் (பால் மேலாண்மை) - 01
கல்வி மற்றும் இதர தகுதி : ஐடிடி, என்.டி.டி அல்லது பால் அறிவியல், பால்வளம் போன்ற பிரிவுகளில் முதுகலைப் பட்டம் அல்லது உணவு தொழில்நுட்பம், பால் தொழில்நுட்பம், உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகளில் பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.35,900 முதல் ரூ.1,13,500

பணி : இணை மேலாளர் (டிஇ) - 02
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் போன்ற ஏதேனும் ஓர் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : மேற்கண்ட இரு பணிகளுக்கு வயது வரம்பு கிடையாது. ஓசி பிரிவினர் மட்டும் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.35,900 முதல் ரூ.1,13,500

பணி : நிர்வாகி (ஆய்வகம்) - 01
கல்வித் தகுதி : அறிவியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள், அரசு வழங்கும் 2 ஆண்டு டிப்ளோமா இன் லேப் (டெக்னீசியன்) முடித்திருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.20,000 முதல் ரூ.63,600

பணி : எல்விடி (LVD) - 03
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகனங்களை ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநராகக் குறைந்தபட்சம் 3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000

பணி : மூத்த தொழிற்சாலை உதவியாளர் - 24
கல்வித் தகுதி : 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : மேற்கண்ட பணியிடங்களுக்கு 01.07.2019 தேதியின்படி 30 முதல் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000

தேர்வு முறை : 85 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் 31 மதிப்பெண்களுக்கு வாய்மொழித் தேர்வு நடத்தப்படும். அதில் பெறப்படும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ஓசி, பிசி, எம்பிசி பிரிவினர் ரூ.260-ம், மற்ற பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

கட்டணத்தை செலுத்தும் முறை : கட்டணத்தை விழுப்புரத்தில் மாற்றத்தக்க வகையில் The General Manager, Villupuram -Cuddalore District Co -operative Milk Producers ' Union L td ., Villupuram என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : www.aavinmilk.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

(விண்ணப்ப உறையின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரை குறிப்பிட்ட எழுத வேண்டும்)

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : The Vellore - Thiruvannamalai District Co.Operative Milk Prodeucers Union Ltd., C-1325 No.142, Arcot Road, Sathuvachari, Vellore - 632 009

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20.09.2019 (இன்றே கடைசி நாள் ஆகும்.)

விண்ணப்பப் படிவத்தினைப் பெற : இங்கே கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Aavin Vellore Recruitment For 31 Senior Factory Assistant Posts: Apply Today
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+