தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள மேனேஜர், டெபுடி மேனேஜர், எக்ஸிகியூட்டிவ், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து 21-07-2018க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 20
பணியிடம்: காரைக்குடி, சிவகங்கை மாவட்டம்
பணி, காலியிடங்கள் விவரம்:
பணி: மேனேஜர்-03
சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100
பணி: மேனேஜர்-01
சம்பளம்: மாதம் ரூ. 9300-34800
பணி: டெபுடி மேனேஜர்-01
சம்பளம்: மாதம் ரூ.9300-34800
பணி: செக்ரெட்டரி-01
சம்பளம்: மாதம் ரூ.5200-20200
பணி: எக்ஸிகியூட்டிவ்-03
சம்பளம்: மாதம் ரூ.5200-20200
பணி: ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்-01
சம்பளம்: மாதம் ரூ.5200-20200
பணி: ஓட்டுநர்-01
சம்பளம்: மாதம் ரூ.5200-20200
பணி: டெக்னிஷியன்-02
சம்பளம்: மாதம் ரூ.5200-20200
பணி: சீனியர் ஃபேக்டரி அசிஸ்டன்ட்-07
சம்பளம்: மாதம் ரூ.4800-10000
தகுதி: விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 8,10,12 ஆம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250. "Manager, SivagangaiD.C.M.P.U Ltd., and payable at Karaikudi." இந்த முகவரிக்கு காரைக்குடியில் மாற்றத்தக்க வகையில் டிடியாக எடுத்து விண்ணப்பிக்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager,
Sivagangai District Co-operative Milk Producers'
Union Limited,
Kazhanivasal,
Karaikudi-2.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21-07-2018.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பங்களை டவுன்லோட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












