தமிழக அரசிற்கு உட்பட்டு பால்வளத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் சேலம் மாவட்ட கிளையில் காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 19ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : ஆவின்
மேலாண்மை : தமிழக அரசு
பணி : மேலாளர் (கணக்கு)
கல்வித் தகுதி : சி.ஏ. அல்லது ஐ.சி.டபிள்யூ.ஏ. இன்டர் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியானவர்கள் மட்டுமே இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 30. இதர பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
ஊதியம் : ரூ.37,700 முதல் ரூ. 1,19,500 வரையில்
விண்ணப்பிக்கும் முறை : கீழ்க்கண்ட இணையதளத்தில் விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான சான்றுகளை இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பப் படிவம் பெற : https://aavinmilk.com/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : பொது மேலாளர், சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், சித்தனூர், தளவாய்பட்டி - 636 302.
விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசி நாள் : ஆகஸ்ட் 19ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://aavinmilk.com/documents/20142/0/cnslm250719.pdf/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












