ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை! விண்ணப்பிக்க நீங்க ரெடியா?

திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் (Aavin) காலியாக உள்ள மேலாளர் (P&I) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசிற்கு உட்பட்டு திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் (Aavin) காலியாக உள்ள மேலாளர் (P&I) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு ரூ.1.75 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை! விண்ணப்பிக்க நீங்க ரெடியா?

நிர்வாகம் : திருப்பூர்வ தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் (Aavin)

மேலாண்மை : தமிழக அரசு

பணி : மேலாளர் (P&I)

பணியிடம் : திருப்பூர் மாவட்டம்

வயது வரம்பு :

30 முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.55,500 முதல் ரூ.1,75,700 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.aavinmilk.com என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 05.01.2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The General Manager, Tirupur District Cooperative Milk Producers Union Ltd., Veerapandy pirivu, Palladam road,Tirupur - 641 605

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 05.01.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : கல்வித்தகுதி மற்றும் வாய்வழி சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பக் கட்டணம் :

பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ .250

எஸ்சி / எஸ்சிஏ / எஸ்டி வேட்பாளர்களுக்கு - ரூ .100

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://aavinmilk.com/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
AAVIN Recruitment 2021: Apply for Manager(P&I) Post at Tiruppur
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X