ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் கோவையிலேயே தமிழக அரசு வேலை..!

தமிழக அரசிற்கு உட்பட்ட ஆவின் நிறுவனத்தின் கோவை கிளையில் காலியாக உள்ள தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் ஓட்டுநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசிற்கு உட்பட்டு பால்வளத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் கோயம்புத்தூர் கிளையில் காலியாக உள்ள தொழில்நுட்ப வல்லுநர், ஓட்டுநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் கோவையிலேயே தமிழக அரசு வேலை..!

நிர்வாகம் : ஆவின்

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 15

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

தொழில்நுட்ப வல்லுநர் (பாய்லர்மேன்) - 01

கல்வித் தகுதி : 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் சென்னை கொதிகலன்கள் இயக்கத்தின் இயக்குநரால் வழங்கப்பட்ட கொதிகலன் உதவியாளர் சான்றிதழ் Gr.II / Gr.III பெற்றிருக்க வேண்டும்.

தொழில்நுட்ப வல்லுநர் (எலக்ட்ரீஷியன்) - 06
கல்வித் தகுதி :

  • 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரீசியன் பிரிவில் ஐடிஐ முடித்து "பி" உரிம தேசிய வர்த்தக சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • அல்லது பொறியியல் பிரிவில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளோமா மற்றும் "சி" உரிம சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

கனரக வாகன ஓட்டுநர் - 07

கல்வித் தகுதி : 8-ம் வகுப்பு அல்லது அதற்குச் சமமான படிப்பில் தேர்ச்சி பெற்று கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • மேற்கண்ட பணியிடங்களுக்கு பிசி, எம்பிசி, டிஎன்சி உள்ளிட்ட பிரிவினர் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.19,500 முதல் 62,000 வரையில்

தனியார் செயலாளர் தரம் III - 01

கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்று, ஆங்கில தட்டச்சில் உயர்நிலையும், தமிழ் தட்டச்சில் இளநிலையும் மற்றும் சுருக்கெழுத்து பிரிவில் தமிழில் இளநிலையும், ஆங்கிலத்தில் உயர்நிலை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : உச்ச வயது வரம்பு இல்லை. அனைத்து பணியிடங்களுக்கும் ஓசி பிரிவினர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.20,600 முதல் 65,500 வரையில் வழங்கப்படும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வுகளில் பெறப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.250. இதனை கோயம்புத்தூரில் மாற்றத்தக்க வகையில், The General Manager, The Coimbatore District Co -operative Milk Producers எனும் பெயரில் தேசிய வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : www.aavinmilk.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

The General Manager ,
The Coimbatore District Cooperative Milk Producers' Union Limited,
Pachapalayam, Kalampalayam (Post),
Coimbatore - 641 010.

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி : 23.09.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/cdcbe3008191.pdf/767c311c-98d4-abff-e924-9453974d46ce என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Aavin Recruitment 2019 for Technician and Driver at Coimbatore
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+