தமிழக அரசின் பால்வளத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் மதுரை கிளையில் காலியாக உள்ள மேலாளர், இணை மேலாளர், மூத்த தொழிற்சாலை அலுவலர், ஓட்டுநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனயடைலாம்.

நிர்வாகம் : ஆவின்
மேலாண்மை : தமிழக அரசு
பணி மற்றும் பணியிட விபரங்கள் :-
பணி : மேலாளர் (கணக்கு) - 01
கல்வித் தகுதி : CA inter, ICWA inter முடித்திருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.37,700 முதல் ரூ.1,19,500 வரையில்
பணி : மேலாளர் (பொறியாளர்) - 01
கல்வித் தகுதி : பொறியியல் துறையில் மின் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் கருவி, மின் மற்றும் கருவி, மின்னணுவியல் மற்றும் தொடர்பு, ஆட்டோமொபைல், எந்திரவியல் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.36,700 முதல் ரூ.1,16,200 வரையில்
பணி : மேலாளர் (தீவனம்) - 01
கல்வித் தகுதி : விவசாயப் பிரிவில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ. 36700 முதல் ரூ.1,16,200 வரையில்
பணி : இணை மேலாளர் (பால்) - 02
கல்வித் தகுதி : ஐடிடி/ என்டிடி அல்லது பால் அறிவியல் துறையில் முதுகலைப் பட்டம் அல்லது எனவு தொழில்நுட்பம், பால் தொழில்நுட்பம், பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ. 35,900 முதல் ரூ.1,13,500 வரையில்
பணி : இணை மேலாளர் (டிசி) - 02
கல்வித் தகுதி : பால் அறிவியல், பால் வேதியியல், வேதியியல், உயிர் வேதியியல், பயோடெக், தரக் கட்டுப்பாடு பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ. 35,600 முதல் ரூ.1,12,800 வரையில்
பணி : நிர்வாகம் (அலுவலகம்) - 09
ஊதியம் : மாதம் ரூ. 20,600 முதல் ரூ.65,500 வரையில்
பணி : தனியார் செயலாளர் தரம் III
காலியிடங்கள் : 02
கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் ஆங்கில தட்டச்சில் உயர்நிலை மற்றும் தமிழ் தட்டச்சில் இளநிலை தேர்ச்சி மற்றும் ஆங்கில சுருக்கெழுத்தில் உயர்நிலை மற்றும் தமிழ் சுருக்கெழுத்தில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.20,600 முதல் ரூ. 65,500 வரையில்
பணி : நிர்வாகம் (ஆய்வகம்) - 01
கல்வித் தகுதி : அறிவியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் தொழிலக ஆய்வக பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.20,000 முதல் ரூ.63,600 வரையில்
பணி : இளநிலை நிர்வாகி (தட்டச்சு) - 01
கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சு பிரிவில் உயர்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்
பணி : மூத்த தொழிற்சாலை உதவியாளர்
காலியிடங்கள் : 30
கல்வித் தகுதி : 12-வது தேர்ச்சி அல்லது ஏதேனும் ஓர் பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்
விண்ணப்பக் கட்டணம் :
- ஓசி, எம்பிசி, பிசி விண்ணப்பதாரர்கள் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
- எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினருக்குக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : http://www.aavinmilk.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்துப் பதிவு, விரைவு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
A.1301. The Madurai District Cooperative Milk Producers' Union Limited, Sivagangai Main Road, Sathamangalam, Madurai 625 020
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி : 15-07-2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/cdmdu200619 (1).pdf/26efe87c-f6a0-209f-f146-0d85dc18bb9a¬iceURL=/documents/20142/0/cn1mdu200619.pdf/edba861b-e073-f8ec-0494-2d363d3df20f¬iceName= என்ற லிங்கினை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












