ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை மற்றும் முதுநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 15-07-2018 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 186
வயது வரம்பு: 18 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும் அல்லது டிப்ளோமா படிப்பை எலெக்ட்ரானிக்ஸ், தொலைத் தொடர்பு ஆகிய துறைகளில் படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.14500-ரூ. 33500.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவப் பரிசோதனை, உடற்தகுதி தேர்வு, போன்ற முறைகளில் தேர்ச்சி நடைபெறும்.
கட்டணம்: ரூ.1,000, எஸ்சி, எஸ்டி, மற்றும் பெண்களுக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 15-07-2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
மேலும் முழுமையான விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.