ஏர்போர்ட் அதாரிட்டி ஆப் இந்தியா (ஏ.ஏ.ஐ.,) நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்களிடமிருந்து இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கூடுதல் விவரங்களுக்கு https://www.aai.aero/en என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
இந்த பெருமைவாய்ந்த ஏர்போர்ட் அதாரிட்டி ஆப் இந்தியா (ஏ.ஏ.ஐ.,) நிறுவனத்தில்தான் தற்போது பல்வேறுப் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இங்கு தற்போது, ஜூனியர் எக்சிகியூட்டிவ் பிரிவில் ஆர்க்கிடெக்சர் 3, சிவில் 90, எலக்ட்ரிக்கல் 106, எலக்ட்ரானிக்ஸ் 278, ஐ.டி., 13 என மொத்தம் 490 காலி இடங்கள் உள்ளன.
ஏர்போர்ட் அதாரிட்டி ஆப் இந்தியா பணியிடங்களுக்கான கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் பி.இ., / பி.டெக்., முடித்திருக்க வேண்டும்.

ஏர்போர்ட் அதாரிட்டி ஆப் இந்தியா பணியிடங்களுக்கான வயதுத்தகுதி: 1.5.2024 அடிப்படையில் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்ச்சி முறை: GATE நுழைவுத்தேர்வு மதிப்பெண், நேர்முகத்தேர்வு அடிப்படையில் ஆட்கள் இந்தப் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவர்.
ஏர்போர்ட் அதாரிட்டி ஆப் இந்தியா பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக்கட்டணமாக ரூ. 300 செலுத்தவேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
கடைசிநாள்: விண்ணப்பங்களை அனுப்ப வரும் 1.5.2024-ம் தேதி கடைசி நாளாகும்.
இணையதள முகவரி: கூடுதல் விவரங்களுக்கு https://www.aai.aero/en என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












