கடை கதவை திறந்துவிட லேட்டானதால் வேலை இழந்து, பின் 3 பில்லியன் டாலர் லாபமீட்டிய தொழிலதிபர்!

By Gowtham Dhavamani

பணிநீக்கம் ஆனவரா? இப்போது நீங்கள் எப்படிப்பட்ட மனஉளைச்சல்லுக்கு தள்ளப்பட்டுள்ளீர்கள் என்பதை நாங்கள் அறிவோம், ஆனால் நீங்களே உங்களை தண்டித்துக் கொள்வதற்கு முன், நீங்கள் நல்ல சூழலில் இருப்பதை அறிய வேண்டும். நம் தலைமுறையின் புகழ்பெற்ற மனிதப் பெயர்களில் சில - அவர்கள் மிகப்பெரிய பிரமாண்டங்களை உருவாக்கி, பெரும் பிராண்டுகளை உருவாக்கியவர்கள் மற்றும் நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் மனதை கொள்ளை கொள்ளும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவர்கள்- இவர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தைச் செய்துவருவதற்கு முன்னர், அவர்களது வேலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள்.

ஸ்டீவ் ஜாப்ஸ்:
 

ஸ்டீவ் ஜாப்ஸ்:

அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை நிர்வாகியுடன் மோதல் ஏற்பட்ட காரணமாக, ஸ்டீவ் ஜாப்ஸ், ஆப்பிள் நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டார், அது அவர் நிறுவிய நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அது அவரைத் தடுக்கவில்லை. ஒரு சில ஆண்டுகளுக்கு பின்பு, அவர் திரும்பி வந்து ஆப்பிள் நிறுவனத்தை உலகில் மிகவும் இலாபகரமான நிறுவனங்களில் ஒன்றாக மாற்றினார்.

மார்க் க்யூபன்:

மார்க் க்யூபன்:

Image Source: commons.wikimedia

மார்க் கியூபன் பணிநீக்கம் செய்யப்பட்டதன் காரணம், அவர் விற்பனையாளராக பணிபுரிந்த கணினி அங்காடியின் கதவுகளைத் திறக்க சிறிது தாமதமாக வந்ததனால். கியூபன், பின்னர் தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார், தற்போது அந்த நிறுவனம் $ 3 பில்லியன் நிகர மதிப்பைக் கொண்டுள்ளது.

ஒப்ரா வின்ப்ரே:

ஒப்ரா வின்ப்ரே:

Image Source: publicdomainpictures

ஓப்ரா வின்ப்ரே ஒரு செய்தியாளராக தனது வேலையில் இருந்து துறத்தடிக்கப்பட்டார், ஏனெனில் அவரது நிகழ்ச்சியின் தயாரிப்பாளர், அவர் அப்பதவிக்கும் தொலைக்காட்சிக்கும் சரியான நபர் இல்லை என்று நினைத்தார். இறுதியில், ஓபரா தொகுப்பாளராக ஒரு பேச்சு நிகழ்ச்சியில் பங்கேற்று அது வெற்றி கண்டார். உலகளாவிய பில்லியனர்களின் பட்டியலிலும் சேர்ந்தார்.

ஜே. கே. ரவுலிங்:
 

ஜே. கே. ரவுலிங்:

Image Source: wikipedia

ஹாரி பாட்டர் எனும் அற்புதமான மந்திரவாத கதையை உலகின் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் மூத்தவர்களுக்கும் அறிமுகப்படுத்திய பெண், அம்னஸ்டி இன்டர்நேஷனல் லண்டன் அலுவலகத்தில் தனது வேலையில் இருந்து வெளியேற்றப்பட்டார், ஏனென்றால் அவருடைய நேரத்தை நிறைய நேரம் கனவு கண்டே கழித்தார் என்று குற்றச்சாட்டு. இன்று, ரவுலிங் ராணியை விட பணக்காராக உள்ளார்.

வர்ல்ட் டிஸ்னி:

வர்ல்ட் டிஸ்னி:

Image Source: commons.wikimedia

வர்ல்ட் டிஸ்னி, மிக்கி மவுஸ் எனும் கார்ட்டூனை உருவாக்கியவர் மட்டும் அல்ல நம் காலத்தின் பல பொழுதுபோக்கு கார்ட்டூன் கதாப்பாத்திரங்களை உருவாக்கினார். இவர் அவருடைய கார்ட்டூனிஸ்டு வேலையில் இருந்து நீக்கப்பட்டார், ஏனென்றால் அவரது முதலாளிகள் அவருக்கு "கற்பனை திறன் இல்லை" என்று நினைத்தனர். பின்னர், அவர் ஹாலிவுட்டிற்கு சென்று, டிஸ்னி ஸ்டுடியோஸ் என்னும் நிறுவனத்தை அவரது சகோதரருடன் சேர்ந்து ஆரம்பித்தார் மற்றும் பின் நடந்தது அனைத்தும் வரலாறு.

லேடி காகா:

லேடி காகா:

Image Source: commons.wikimedia

லேடி காகா ஒரு பெரிய இசை பதிவு நிறுவனத்தின் கீழ் பணிப்புரிய கையெழுத்திட்டு பின் அது கைவிடப்பட்டது, ஆனால் அந்த தோல்வியினால் கலங்காமல் பாடல்கள் தொடர்ந்து பாடினார். அதன் மூலம் மாபெரும் வெற்றி கண்டார், லேடி காகா, இன்று இசை துறையில் மிகப்பெரிய பெயர்களில் ஒருவராகவும் மில்லியன் கணக்கான சொத்துக்கு சொந்தமானார் ஆவர்.

தாமஸ் ஆல்வா எடிசன்

தாமஸ் ஆல்வா எடிசன்

Image Source: wikipedia

கண்டுபிடிப்பாளர், அசாதாரணமான வணிகர் மற்றும் அத்தலைமுறையின் மிகப்பெரிய விஞ்ஞானிகளில் ஒருவராக இருந்த தாமஸ் ஆல்வா எடிசன், தன் பணியில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார். ஏனெனில் அவர் தரையில் அமிலத்தை கொட்டிவிட, அது அவரது முதலாளியின் மேசையை நாசம் செய்தது என்பதால். அவர் பின்னர் தனது ஆய்வகத்தில் கடுமையாக உழைத்ததன் விளைவு, இன்று அனைவருக்கும் மின்விளக்கு கிடைத்துள்ளது.

மடோன்னா:

மடோன்னா:

Image Source:

பல நாட்களுக்கு பாடல் பட்டியலில் முதலிடத்தில் இருந்த நவீன பாப் ராணி, தனது முதல் நாளன்று தனது வேலையில் இருந்து வெளியேற்றப்பட்டார். டன்கின் டோனட்ஸில் தற்செயலாக ஒரு வாடிக்கையாளர் மீது டோனட் ஜெல்லி சிதரியதால் அது நிகழ்ந்தது.. உணவுத் தொழிலில் அவரது வாழ்க்கை நின்று விட்டது என்றே சொல்லலாம், ஆனால் அவரது நம்பமுடியாத இசை திறமையைக் கொண்டு, மடோனா ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டத்தையே பின்தொடர்ந்து வர வைத்து ஒரு சமமான நிலையை அடைந்தார்.

ஜெர்ரி சீன்ஃபீல்ட்:

ஜெர்ரி சீன்ஃபீல்ட்:

Image Source: commons.wikimedia

நீங்கள் உங்கள் வேலையில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டதே தெரியாமல் சகஜமாக வேலைக்கு சென்ற நிலையே ஜெர்ரி சீன்ஃபீல்டிற்கு நடந்தது. அவர் ஒத்திகைக்காக சென்றபோது, அவருடைய கதாபாத்திரம் நிகழ்ச்சியில் இருந்து நான்கே எபிசோடுகள் எடுத்ததில் இருந்து நீக்கப்பட்டதை அறிந்தார். ஆனால் சீன்ஃபீல்ட் தனது நகைச்சுவை அறிவை உலகத்தையே கண்டறிய வைத்தார். அவர் பின்னர் ஒன்பதாவது சீசனின் முடிவில் மில்லியன் கணக்கில் ஹிட்டான சிட்காம் "சீன்ஃபீல்ட்" மற்றும் ராக் ஆகியவற்றில் எழுதி நடித்தார்.

லீ லக்கோக்க:

லீ லக்கோக்க:

Image Source: commons.wikimedia

ஃபோர்டு கம்பெனியின் எழுச்சிக்குப் பிறகு, லக்கோக்கவுக்கும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஃபோர்டு ஜூனியர், மற்றும் தலைவர் ஆகியோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அப்பணியில் இருந்து விலகினார். ஆனால் இது "டர்ன்அரவுண்ட் குரு"வான லீ லக்கோக்கவை பாதிக்கவில்லை மற்றும் நம் தலைமுறையின் மிகப்பெரிய வர்த்தக யோசனைகள் கொண்டவர்களில் ஒருவராக கிறைஸ்லருடன் தனது மாபெரும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டு, சில ஆண்டுகளில்லேயே ஒரு மாபெரும் வாகன உற்பத்தியாளராக உருவெடுத்தார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
10 Incredibly Famous People Who Found Success After Getting Fired
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X