யுபிஎஸ்சி சார்பில் 2021-ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. முதனிலைத் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு www.upsc.gov.in இணையதளத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) சார்பில் நடப்பு ஆண்டிற்கான (2021) சிவில் சர்வீஸ் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. IAS, IPS, IFS உள்ளிட்ட 24 வகையாக இந்திய குடிமையியல் பணிகளுக்கு இத்தேர்வின் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
சிவில் சர்வீஸ் தேர்வு 2021:
UPSC Civil Services 2021 தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் 4ம் தேதியன்று வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. மொத்தம் 712 காலிப் பணியிடங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு இளங்கலைத் துறையில் பட்டம் பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் 01.08.2019 தேதியின்படி 21 முதல் 32 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவு விண்ணப்பதாரருக்கு 3 ஆண்டுகளும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசு விதியின்படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் யுபிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.upsconline.nic.in/ எனும் தளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை :
இப்பணியிடங்களுக்கு மொத்தம் மூன்று கட்டங்களாக UPSC IAS Civil Services 2021 தேர்வு நடைபெறும். அவை முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் ஆகும். விண்ணப்பதாரர்கள் இதில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
முக்கிய நாட்கள்:
அறிவிக்கை வெளியான நாள் : 04 மார்ச் 2021
விண்ணப்பப்பதிவு முடியும் நாள் : 24 மார்ச் 2021
UPSC Civil Services Prelims 2021 தேர்வு நடைபெறும் நாள் : 21 ஜூன் 2021
தேர்வு மையங்கள்:
நாடு முழுவதும் யுபிஎஸ்சி சிவில் பணிகளுக்கான தேர்வு நடைபெறும். தமிழகத்தைப் பொறுத்தவரையில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி மற்றும் புதுச்சேரியில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம் :
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் போது ரூ.100 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் வழியில் செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத் திறனாளி மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
மேலும் விபரங்களுக்கு:
யுபிஎஸ்சி சார்பில் வெளியாகியுள்ள ஐஏஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள் https://www.upsc.gov.in அல்லது https://upsconline.nic.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, மார்ச் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












