தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் காவல் சார்பு ஆய்வாளர் (விரல் ரேகைப் பிரிவு) பணியிடங்களுக்கான தேர்வு அனுமதிச் சீட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் காவல் சார்பு ஆய்வாளர் பணியில் விரல் ரேகைப் பணியிடங்களுக்கான காலியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து, தற்போது, இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தேர்விற்கான அனுமதிச் சீட்டும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடத்திற்கு விண்ணப்பித்தவர்கள் www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் தங்களுக்கான பதிவெண்ணை இட்டு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
English summary
TNUSRB SI Fingerprint Hall Ticket/Admit Card released for PMT; download here
Story first published: Wednesday, January 9, 2019, 10:38 [IST]


Click it and Unblock the Notifications












