விமானத்தில் உள்ள கருப்புப் பெட்டி என்ன நிறம் தெரியுமா?

By Kani

போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் வினா விடைகளின் தொகுப்பு விளக்கங்களுடன் தொகுத்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் உள்ள கருப்புப் பெட்டி என்ன நிறம் தெரியுமா?

 

சிந்து நாகரிகத்தில் உள்ள 'ஆலம்கீர்' நகரம் தற்போது எந்த இந்திய நகரத்தில் உள்ளது?

1. மேற்கு உத்தர பிரதேசம் 2. ராஜஸ்தான் 3. கிழக்கு உத்திர பிரதேசம்

விடை: 1. மேற்கு உத்தரபிரதேசம்

விளக்கம்: சிந்து சமவெளி நாகரிகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய நகரங்களில் இதுவும் ஒன்றாகும். இது மேற்கு உத்தரபிரதேசத்தில் இருந்தது. இங்கு சிறப்பு வாய்ந்த கண்டுப்பிடிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. ஆலம்கீர்பூர் சிந்து சமவெளி நகரங்களில் ஒன்றாகும்.

மாநில சட்டப்பேரவையை கூட்டவோ கலைக்கவோ செய்யும் அதிகாரம் யாருக்கு உண்டு?

1. ஆளுநர் 2. குடியரசுத் தலைவர் 3. சட்டப்பேரவை

விடை:1. ஆளுநர்

விளக்கம்: ஆளுநர் ஒவ்வொரு மாநிலத்திற்கும் இருக்க வேண்டுமென சட்டவிதி 153 கூறுகின்றது. மாநிலத்தின் நிர்வாக அதிகாரம் ஆளுநர் கையில் உள்ளது. ஆளுநர் நியமிக்கப்படும் மாநிலத்தை சார்ந்தவராக இருக்ககூடாது.

காந்தரக்கலை யாருடைய காலத்தில் அறிமுகப்படுத்தியது?

1. அசோகர் 2. கனிஷ்கர் 3. ஹர்சர்

விடை: கனிஷ்கர்

விளக்கம்: கனிஷ்கர் காலத்தில் மதுரா மற்றும் காந்தரக்கலை மிகவும் சிறப்பாக வளர்சியுற்றது. இந்திய கிரேக்கம் சேர்ந்த சிற்ப கலையே காந்தரக் கலை என அழைக்கப்படுகிறது.

புன்னகை திட்டம் அறிவித்துள்ள மாநிலம் எது?

1.கேரளா 2.தமிழ்நாடு 3.ஆந்திரப் பிரதேசம்

விடை: 1.கேரளா

விளக்கம்: கேரளா அரசு புன்னகை என்னும் திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டிற்கு உட்ப்பட்ட 60 வயதினருக்கு கீழ் உள்ள முதியோருக்கு இலவச பல்செட் திட்டம் வழங்க திட்டமிட்டுள்ளது.

விமானத்தின் உள்ள கருப்புப் பெட்டி நிறம் என்ன ?

 

1. பச்சை 2. கருப்பு 3. ஆரஞ்சு

விடை: ஆரஞ்சு

விளக்கம்: 'கருப்பு பெட்டி' கருப்பு நிறமாக இருக்காது. எளிதாக கண்டுபிடிக்கும்

வகையில் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
tnpsc test question paper and answer key
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X