தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் நடைபெற்ற முடிந்த குரூப் 1 தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி சார்பில் கடந்த ஜூலை மாதம் குரூப் 1 பணியிடங்களுக்கான முதன்மை தேர்வு நடைபெற்றது. இதற்கான முடிவுகள் இன்று (டிசம்பர் 9) வெளிவந்துள்ளது. குரூப் 1 தேர்வில் பங்கேற்றவர்கள் தங்களுக்கான தேர்வு முடிவை www.tnpsc.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும், இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் டிசம்பர் 23 முதல் 31 ஆம் தேதி வரையில், அடுத்தகட்ட நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்டவை நடைபெறும்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகளை எப்படி காண்பது?
- விண்ணப்பதாரர் www.tnpsc.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.
- அதில், Latest Result என்னும் பகுதியை கிளிக் செய்யவும்.
- அத்தளத்தில் POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES EXAMINATION-I (GROUP-I SERVICES) என்பதற்கு அருகில் தேர்விற்கான முடிவு லிங்கை காணப்படும். அதனை கிளிக் செய்யவும்.
- அங்கே இணைக்கப்பட்டுள்ள பிடிஎப் தரவில் குரூப் 1 முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுடைய தேர்வு எண் கொடுக்கப்பட்டிருக்கும்.
நேரடியாக குரூப் 1 தேர்வு முடிவுகளைக் காண இங்கே கிளிக் செய்யவும்.
tnpsc recruitment tamilnadu tamilnadu government government jobs job alerts exam result group 1 வேலை வாய்ப்பு அரசு வேலை தமிழக அரசு டிஎன்பிஎஸ்சி தேர்வு
English summary
TNPSC Group 1 Main exam result 2019 announced tnpsc.gov.in
Story first published: Monday, December 9, 2019, 17:17 [IST]


Click it and Unblock the Notifications












