'பல் போனால் சொல் போச்சு' முதலைக்கு எத்தனை பற்கள் தெரியுமா?

தேர்வுக்கு தயாராவதும், போருக்கு தயாராவதும் ஒன்றுதான். சரியான பயிற்சியும், முயற்சியும் இல்லை என்றால் வெற்றி சாத்தியமில்லை.

By Kani

தேர்வுக்கு தயாராவதும், போருக்கு தயாராவதும் ஒன்றுதான் சரியான பயிற்சியும், முயற்சியும் இல்லை என்றால் வெற்றி சாத்தியமில்லை. சரியான பயிற்சி இருக்கும் போது வெற்றியானது நம்மை விட்டு விலகுவதும் இல்லை நம்மை கைவிடுவதும் இல்லை.

எங்கையே கேட்ட ஸ்லாங் மாதிரி இருக்கா, அதை விடுங்க அரசு தேர்வுகளுக்கான தயாரிப்புகளில் இருப்பவர்களுக்கு பத்திரிகை வாசிப்பு பயிற்சி என்பது அத்தியாவசியமான ஒன்று.

'பல் போனால் சொல் போச்சு' முதலைக்கு எத்தனை பற்கள் தெரியுமா?

இதோடு, என்ன பாடத்திட்டமே அதை மட்டும் சரியான முறையில், மீண்டும், மீண்டும் படிப்பது மிக முக்கியம். பல்வேறு விதமான தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கான சில மாதிரி வினாக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. முதலைக்கு எத்தனை பற்கள் உள்ளன?

விடை: 60

விளக்கம்: முதலை ஊர்வன இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இது நீரிலும், நிலத்திலும் வாழக் கூடியது. முதலைகளில் சராசரி வாழ் நாள் 70 ஆண்டுகள் ஆகும்.சில முதலைகள் 100 ஆண்டுகள் வரை வாழ்கின்றன.

ஆஸ்திரேலிய மிருககாட்சி சாலையில் உள்ள நன்னீர் முதலையில் ஒன்று 130 ஆண்டுகள் உயிர் வாழ்ந்து சாதனை படைத்துள்ளது.

2. சபர்மதி ஜெயில் எந்த மாநிலத்தில் உள்ளது?

விடை: குஜராத் (அகமதாபாத்).

விளக்கம்: 1895 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சபர்மதி ஜெயில் குஜராத்தில் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் அமைந்துள்ளது. 1922 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி சில நாட்களுக்கு இங்கு சிறை வைக்கப்பட்டார்.

3. கப்பலின் பக்கவாட்டில் வரையப்பட்ட கோடுகளின் பெயர் என்ன?

விடை: பிளிம்சால் கோடுகள்

விளக்கம்: பிளிம்சால் கோடு என்பது கப்பல்களில் அதிகபட்ச எடை ஏற்றும் அளவைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு கோடு. இக்கோடு சாமுவேல் பிளிம்சால் என்னும் ஆங்கிலேயரின் நினைவாக வைக்கப்பட்டது. இவர் ஒரு அரசியல்வாதியும் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார்.

இக்கோடு நீரில் மூழ்குமானால் அது கப்பலில் அதிக எடை ஏற்றப்பட்டிருப்பதையும் கப்பலின் பாதுகாப்பின்மையையும் அடையாளம் காட்டுவதாக எடுத்துக்கொள்ளலாம்.

4. "ஸ்லம் டாக் மில்லியனர்" திரைப்படம் எத்தனை தலைப்புகளில் ஆஸ்கர் விருது வென்றது?

விடை: 8 தலைப்புகள்

விளக்கம்: மும்பைக் குப்பத்தில் வளர்ந்த ஜமால் மாலிக் என்ற சிறுவன் எப்படி கோடி, கோடியாக அள்ளுகிறான் என்பதுதான் கதை.

முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, இந்திய தொழில்நுட்பக் கலைஞர்கள் பெருமளவில் பங்கேற்ற 'ஸ்லம் டாக் மில்லியனர்' திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலிக்கலவை (சவுண்ட் மிக்சிங்) மற்றும் சிறந்த படத்தொகுப்பு (எடிட்டிங்) உள்ளிட்ட 8 பிரிவுகளில் ஆஸ்கார் விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.

5. இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் எந்தப் பிரிவு உச்ச நீதிமன்றத்துக்கு வானளாவிய அதிகாரம் வழங்கியுள்ளது?

விடை: பிரிவு எண் 136

விளக்கம்: இந்திய நீதித்துறை, நிர்வாகிகள் முதல் பாராளுமன்றம் வரை அதன் கட்டுப்பாட்டை செலுத்த முடியும்.

நீதித்துறை அரசியல் பொருள் விளக்குபவராக செயல்படுகிறது. இரு மாநிலங்களுக்கு இடையிலோ, ஒரு மாநிலத்துக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையிலோ ஏற்படும் பிரச்சினைகளில் நடுநிலையாளராக செயல்படும். பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் இயற்றப்பட்ட சட்டம் நீதிமுறை மேலாய்வுக்கு உட்பட்டது.

அந்த சட்டம் அரசியலமைப்பு விதிகளை மீறுகிறது என்று நினைத்தால் நீதித்துறை அரசியலமைப்பில் அல்லாததாக அறிவிக்க முடியும்.

6. தமிழ்நாட்டில் எத்தனை காவல்நிலையங்கள் உள்ளன?

விடை: 1,492

விளக்கம்: தமிழ்நாடு காவல்துறை தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டவும், குற்றங்களைத் தடுக்கவும், தமிழ்நாடு அரசு உள்துறை அமைச்சகத்தின் கீழ், ஒரு தலைவரைக் (டிஜிபி) கொண்டு இயங்கும் அரசு சார்ந்த அமைப்பாகும். இது இந்தியாவில் ஐந்தாவது பெரிய காவல்துறை ஆகும்.

7. நீரால் சூழப்பட்ட இந்தியாவின் சுற்றளவு என்ன?

விடை:15,200 கி.மீ

விளக்கம்: இந்தியா தெற்கே இந்தியப் பெருங்கடல், மேற்கே அரபிக் கடல், கிழக்கே வங்காள விரிகுடா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் எல்லை நாடுகளாக மேற்கே பாக்கிஸ்தான், வடக்கே பூட்டான், மக்கள் சீனக் குடியரசு, நேபாளம், கிழக்கே வங்காளதேசம், மியான்மர் ஆகியவை அமைந்துள்ளன.

பரப்பளவில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ள நாடு. இந்தியா மொத்தம் 7,517 கிமீ (4,700 மைல்) நீளக் கடல் எல்லைக் கொண்டது.

8. இந்தியாவின் மிக நீளமான ஆறு எது?

விடை: பிரம்மபுத்திரா

விளக்கம்: பிரம்மபுத்திரா ஆறு ஆசியாவின் பெரிய ஆறுகளில் ஒன்றாகும். திபெத்திலுள்ள கயிலை மலையில் ஸாங்-போ என்ற இடத்தில் பிறக்கிறது.

திபெத்திலுள்ள உலகின் ஆழமான பள்ளத்தாக்கான யர்லுங் இட்சாங்போ பெரும் செங்குத்து பள்ளத்தாக்கு உட்பட பல பள்ளத்தாக்குகளின் வழி கிழக்கு நோக்கி பயணப்பட்டு நாம்சா-படுவா மலையருகே, தெற்கு தென்மேற்காக வளைந்து அருணாசல பிரதேசத்தில் சியாங் என்ற பெயரில் நுழைந்து, பின் சமவெளிப் பகுதியை அடைகிறது.

9. துப்பறியும் போலீஸ் படையில் பன்றிகளைப் பயன்படுத்தும் நாடு எது?

விடை: ஜெர்மனி

விளக்கம்: ஜெர்மனி என்ற ஆங்கிலச் சொல் இலத்தீனிய ஜெர்மானியா என்பதிலிருந்து வந்துள்ளது. 82 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்நாடு மத்திய ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு. இதன் வடக்கே வட கடல், டென்மார்க், பால்ட்டிக் கடல்; கிழக்கே போலந்து, செக் குடியரசு; தெற்கே ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து; மேற்கே பிரான்ஸ், லக்சம்பேர்க், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகியன எல்லைகளாக உள்ளன. ஜெர்மனியின் பரப்பளவு 357,021 கிமீ.

10. நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி யார்?

விடை: மேரி கியூரி (இயற்பியல் - 1903)

விளக்கம்: மேரி க்யூரி போலந்தில் வார்சா எனும் இடத்தில் 1867இல் பிறந்தார். பின்னர் பிரான்சில் வசித்தார். இவர் இயற்பியல் மற்றும் வேதியியலுக்காக நோபல் பரிசை முறையே 1903, 1911 ஆம் ஆண்டுகளில் பெற்றார்.

(இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற முதல் நபர்) அத்துடன் பாரிஸ் பல்கலைக்கழகத்தின் முதலாவது பெண் பேராசிரியரும் இவரேயாவார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tnpsc exam model questions
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X