தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெறவுள்ள பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணி தேர்விற்கான தேதி வெளியிடப்பட்டுள்ள நிலையில் தேர்வு மையத்தின் பெயரையும் தெரிந்து கொள்ளும் வகையில் ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் (TN TRB) சார்பில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1060 பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, கொரோனா ஊரடங்கு உள்ளிட்டவற்றின் காரணமாக இத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தேர்வு நடத்துவதற்கான தேதி வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, அரசு பல்தொழில்நுட்பக் கல்லுரி விரிவுரையாளருக்கான தேர்வு 28.10.2021, 29.10.2021, 30.10.2021 மற்றும் 31.10.2021 ஆகிய தேதிகளில் (காலை/ மதியம்) நடைபெற உள்ளது.
இத்தேர்விற்கு உரிய மாவட்டத்தின் அனுமதி சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய (TRB) இணையதள முகவரியில் விண்ணப்பதாரர்கள் தங்களது User ID மற்றும் கடவுச் சொல் (Password) உள்ளீடு செய்து 22.10.2021 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள் தங்களது தேர்வு நுழைவுச் சீட்னை பெற http://trb.tn.nic.in/Default.htm எனும் இணையதள முகவரியிகைக் காணலாம்.


Click it and Unblock the Notifications












