தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் (TN MRB) சார்பில் 2020 ஆம் ஆண்டிற்கான மருத்துவ பணி தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. www.mrb.tn.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதனைக் காணலாம்.

Tamil Nadu Medical Services Recruitment Board (TN MRB) என்னும் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் 2020 ஆண்டிற்கான மருத்துவ பணி தேர்வு அட்டவணை வெளியிட்டுள்ளது. அதில், உதவி மருத்துவர், அறுவை சிகிச்சை உதவியாளர், ரேடியோகிராபர், ஆடியோமெட்ரிக்ஷன் என மொத்தம் 27 தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
இவற்றில், முதற்கட்டமாக உதவி அறுவை சிகிச்சையாளர், ரேடியோகிராபர், ஆடியோ மெட்ரிஸியன், பிஸியன் அசிஸ்டெண்ட் உள்ளிட்ட பணிகளுக்கு பிப்ரவரி மாதம் தேர்வு நடைபெறவுள்ளது. இதன் முடிவுகள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் அறிவிக்கப்படும்.
அதே போன்று, உதவி மருத்துவ அதிகாரி, ஸ்கில்டு அசிஸ்டெண்ட் கிரேடு II, மல்டி பர்போஸ் ஷெல்த் வொர்க்கர் ஆகிய பணிகளுக்கான தேர்வுகள் மார்ச் மாதம் நடைபெறும்.
இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதம் லேப். டெக்னீசியன் கிரேடு II, மே மாதத்தில் அசிஸ்டெண்ட் சர்ஜன், ஃபீல்டு அசிஸ்டெண்ட், டார்க் ரூம் அசிஸ்டெண்ட், டெண்டல் ஹைஜினிஸ்ட் ஆகிய பணிகளுக்கு தேர்வு நடைபெறவுள்ளது.
2020 ஜூலை மாதத்தில் ஆப்தல்மிக் அசிஸ்டெண்ட் பணிக்கும், ஆகஸ்ட்டில் தியேட்டர் அசிஸ்டெண்ட் பணிக்கும் தேர்வு நடைபெறவுள்ளது. லேப் டெக்னீசியன் கிரேடு II, டெண்டல் மெக்கானிக், இசிஜி டெக்னீசியன் ஆகிய பணிகளுக்கு செப்டம்பர் மாதத்தில் தேர்வு நடைபெறவுள்ளது.
இந்த வருடத்தின் இறதி மருத்துவத் தேர்வாக அக்டோபர் மாதம் உணவு பாதுகாப்பு அதிகாரி, ஆக்குபேஷனல் தெரபிஸ்ட், ப்ராஸ்தெட்டிக் கிராப்ட்மேன், தெரபியூட்டிக் அசிஸ்டெண்ட் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வுகளும், நவம்பர் மாதத்தில் பாராமஸிஸ்ட் பதவிக்கான தேர்வுகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












