12ம் வகுப்பு பொதுத் தேர்விற்கான மாதிரி வினாத்தாள் வெளியீடு

12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 
12ம் வகுப்பு பொதுத் தேர்விற்கான மாதிரி வினாத்தாள் வெளியீடு

நடப்பு கல்வி ஆண்டு முதல் தமிழக பள்ளிக் கல்வித் துறை பாடத் திட்டம் மற்றும் தேர்வுத் துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, 12ம் வகுப்பிற்கு புதிய பாடத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், மாதிரி வினாத்தாள் வெளியாவதில் தாமதம் நிலவிவந்த சூழ்நிலையில் பொதுத் தேர்விற்கான மாதிரி வினாத் தாள்கள் கல்வித்துறையின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

மாநில கல்வியில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் www.tnscert.org என்னும் இணையதளத்தில் தமிழ், கணிதம், ஆங்கிலம், கணினி அறிவியல், வணிகவியல், கணக்குப்பதிவியல், இயற்பியல், மனை அறிவியல், வரலாறு உள்பட 37 பாடங்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், அனைத்து பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலமாகவும் மாதிரி வினாத்தாள்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இந்த மாதிரி வினாத்தாள் அடிப்படையில்தான் காலாண்டு, அரையாண்டு மற்றும் பொதுத்தேர்வு வினாத்தாள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனைப் பின்பற்றி மாணவர்களை தயார்படுத்தவும் பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

பாடங்கள் வாரியாக மாதிரி வினாத்தாளை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN 12th Exam Questions Paper 2020: HSC 12th Model Questions Paper Released
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X