கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையாக கல்லூரிகளுக்கான பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் இறுதி பருவத் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என்று திருவாரூர் மத்திய பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் முறையில் தற்போது வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதனிடையே, கல்லூரி, பல்கலைக் கழகங்களில் பருவத் தேர்வுகள் நடத்தப்படாமல் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. குறிப்பாக, இறுதி ஆண்டு மாணவர்களுக்கு பருவத் தேர்வுகள் நடத்தப்படாததால் வேலைக்குச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், திருவாரூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழக இறுதியாண்டு மாணவர்களுக்கு இறுதி பருவத் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என்று அப்பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.