TET EXAM: ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது?

ரொம்ப சீக்கிரம் வச்சுட்டாங்களே...! என, ஒவ்வொரு முறையும் புலம்பி தள்ளும்,'டெட்' தேர்வு எழுது பட்டதாரிகளுக்கு, இம்முறை 'லக்' தான் போல...!

 

ஒரு மாதத்துக்கு மேலே தேர்வுக்கு தயார் ஆக வசதியாக, ஏற்கனவே ஒரு முறை தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியம் ஒத்திவைத்தது. எப்படியாவது இம்முறை தேர்வில் தேர்ச்சி பெற காத்திருந்த பட்டதாரிகளுக்கு, தேர்வு தேதி தள்ளி போனதும் ஒரு வகையில் வரப்பிரசாதம் என, கருதி இருப்பர்.

அக்.14 இல் 'டெட்' தேர்வு...!

முதல் தாள் எழுதவுள்ள தேர்வர்களுக்கான தேதியை, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் தாள் அக்டோபர் 14 முதல் 20 இல் தேதி வரை இரு வேளை நடைபெறவுள்ளது. தேர்வில் 2.3 லட்சம் பட்டதாரிகள் பங்கேற்க உள்ளனர்.

 

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அனைத்து வித பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர, தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும்.

இந்த டெட் தேர்வு மொத்தம் 2 தாள்களை கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள், இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் டெட் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, நடப்பாண்டு டெட் தேர்வுக்கான அறிவிப்பாணை கடந்த மார்ச் 7ம் தேதி வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

2 லட்சம் பேர்

முதல் தாளுக்கு 2 லட்சத்து 30,878 பேரும், 2ம்‌ தாளுக்கு 4 லட்சத்து 1,886 பேரும்‌ விண்ணப்பித்தனர்‌. மேலும், இந்த ஆண்டு டெட் தேர்வை இருகட்டங்களாக நடத்தவும் முடிவானது. அதன்படி, முதல் தாளுக்கான தேர்வை ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டு, பின்னர் நிர்வாக காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டது.

இந்தநிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு (முதல் தாள்) அக்டோபர் 14 முதல் 20ம் தேதி வரை இருவேளைகளில் கணினி வழியில் நடத்தப்படும் என, டிஆர்பி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அக்.14 இல் 'டெட்' தேர்வு...!

இதுதவிர தேர்வர்கள் பயிற்சி மாதிரித் தேர்வு எழுதவும் இணையதளத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து தேர்வர்களும், இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், தேர்வு கால அட்டவணை, ஹால்டிக்கெட் வெளியீடு அக்டோபர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாரப்பூர்வ இணையதளம்/ தேர்வு அறிவிப்பு, பயிற்சி மாதிரி தேர்வு ஆகியவற்றை அறிய... க்ளிக் ப்ளீஸ்...!

http://trb.tn.nic.in/TET_2022/Press News 23.09.2022 - TNTET - Paper - I.pdf

http://trb.tn.nic.in/

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TET Exam Date Notification: The first paper of the postponed Teacher Eligibility Test in Tamil Nadu will be held in two sessions from October 14 to 20. 2.3 lakh graduates are going to write this exam.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X