எம்பிஏ மற்றும் எம்சிஏ பட்டப்படிப்புகள் படிக்க உதவும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்), ME/M.Tech./M.Arch போன்ற படிப்புகளை படிக்க பொது பொறியியல் Pg நுழைவு தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதையடுத்து இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவ, மாணவிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.
2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான MBA மற்றும் MCA பட்டப்படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அண்ணா பல்கலைக்கழகம் பொது நுழைவுத் தேர்வை நடத்துகிறது. இந்த தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வுக்குத்தான் (டான்செட்) தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழக துறைகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் தொகுதி கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் இத்தேர்வின் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.
மேலும், தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பொதுப்பொறியியல் நுழைவுத் தேர்வுக்கான ME/M.Tech./M.Arch போன்ற படிப்பில் சேர நடத்தும் CEETA Pg நுழைவுத்தேர்வும் நடத்தப்பட உள்ளது.
அதுமட்டுல்லாமல் இத்தேர்வின் மூலம் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த மத்திய அரசின் நிதி உதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்களும் மாணவர் சேர்க்கை செயல்முறையை இதன்மூலம் மேற்கொள்ள முடியும்.
டான்செட், சீட்டா பிஜி (TANCET, CEETA Pg) நுழைவு தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜனவரி 10-ம் தேதி காலை 10 மணி முதல் தொடங்குகிறது.
மேலும் பிப்ரவரி 7ஆம் தேதி வரை விண்ணப்பங்களை அனுப்ப முடியும் TANCET தேர்வு மார்ச் 9-ம் தேதியும் CEETA Pg தேர்வு மார்ச் 10-ஆம் தேதியும் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவ, மாணவிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.
இணையதள முகவரி:
கூடுதல் விவரங்களுக்கு
https://tancet.annauniv.edu/tancet/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
மாணவர்கள் கடைசி நாளுக்கு விண்ணப்பங்களை அனுப்பி தேர்வை எழுதி பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


Click it and Unblock the Notifications












